நாள்: 05.09.2022


நல்ல நேரம் :


காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை


மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை 


கௌரி நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் ஒத்துழைப்பான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் குறையும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மை உண்டாகும். புதுமை நிறைந்த நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே,


நெருக்கமானவர்களிடம் சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். மனதில் பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். விவேகம் வேண்டிய நாள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் உள்ள சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அனுபவம் மேம்படும் நாள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,


உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவரின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. நன்மை நிறைந்த நாள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். அமைதி வேண்டிய நாள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,


எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். சமூக பணியில் புதிய அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே,


எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். வியாபார பணிகளில் சில மாற்றத்தின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். விரயம் நிறைந்த நாள்.