உலகத்தில் எவ்ளவோ விஷயங்கள் விலை உயர்ந்ததாக உள்ளது. அதன் மீது மக்களுக்கும் அலாதி ஆர்வம் உண்டு. நாம் எத்தனையோ விஷயங்களை பார்த்ததுண்டு, விலை உயர்ந்த கார், விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த காலணிகள், விலை உயர்ந்த அணிகலன்கள் போன்றவற்றை கேள்விப் பட்டிருப்போம். அதனை ஒரு சில மக்கள் மிகுந்த அர்வத்துடன் வாங்குவதும் உண்டு.


நெயில் பாலிஷ்:


ஆனால் தற்போது நாம் நினைத்தும் பார்க்க முடியாத வகையில் அந்த பட்டியலில் நெயில் பாலிஷ் (nail polish) இடம் பெற்றுள்ளது. இந்த நெயில் பாலிஷின் விலை மூன்று சொகுசு கார்களுக்கு சமம் என கூறுகின்றனர். அப்படி என்ன ஸ்பெஷல் இதில் உள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.


பொதுவாக பெண்களுக்கு நெயில் பாலிஷ் மீது தனி ஆர்வம் உள்ளது. தினசரி தங்கள் நகங்களை பராமரித்து பல வண்ணங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்வது பல பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. பெண்களுக்கு மட்டுமல்லாமல் பேஷன் துறையில் இருக்கும் சில ஆணகளும் நெயில் பாலிஷை பயன்படுத்துவது உண்டு. இன்றைய சூழலில் நெயில் பாலிஷில் பல வண்ணங்கள், பல முறைகள் உள்ளது. பழமையான நெயில் பாலிஷ், ஜெல் நெயில் பாலிஷ், அக்ரிலிக் நெயில் பாலிஷ், பாலி ஜெல், டிப் நெயில் பாலிஷ், ஹார்ட் ஜெல் நெயில் பாலிஷ் என பல வகை உள்ளது. இதற்கென பிரத்யேகமாக தனி பார்லர்களும் செயல்பட்டு வருகிறது. அங்கு பெண்கள் தங்கள் நகங்களை அவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்து பிடித்தமான வண்ணங்கள் மற்றும் வடிவங்களை பொறுத்திக் கொள்வர்.


1 கோடி ரூபாய்:


அந்த வகையில் தற்போது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ப்ளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் (black diamond nail paint) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெயில் பாலிஷின் விலை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறுகின்றனர். உலகின் மிக விலையுயர்ந்த நெயில் பாலிஷின் பெயர் அசச்சூர் ஆகும், இது லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகோசியனால் உருவாக்கப்பட்டது. அவர், தனது ஆடம்பர பொருட்களால் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர்.


இந்த நெயில் பாலிஷ் தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாதாரணமாகத் தோன்றலாம் ஆனால் நீங்கள் உற்று நோக்கினால் அதன் உள்ளே 267 காரட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம், இதன் விலை ஒரு கோடியே 63 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் ஆகும். இது 14.7 மில்லிலிட்டர் ரிட்ஸி டிசைனைக் கொண்டுள்ளது. இதன் விலை மூன்று சொகுசு கார்களுக்கு சமம் என கூறுகின்றனர்.


அதாவது, ஒருவர் 3 Mercedes-Benz GLA காரை வாங்க முடியும், ஒரு காரின் விலை சுமார் ரூ.50 லட்சம் ஆகும்.  இவ்வளவு விலை உயர்ந்த பொருளை யாரேனும் வாங்குவார்களா என்ற எண்ணம் நமக்குள் வருவது சாதாரணம். ஆனால் அப்படி நினைத்தால் அதற்கான பதில் இல்லை என்பது தான். தற்போது வரை 25 பேர் இந்த ப்ளாக் டைமண்ட் நெயில் பாலிஷை வாங்கியுள்ளனர்.


கொரோனாவால் ஏற்படுகிறதா புதிய மூளை நோய்? நோயாளியின் மர்ம மரணத்தால் அதிர்ச்சி


Spain Fire Accident: இரவு விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: இதுவரை 13 உயிரிழப்பு.. 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!