சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


பின்விளைவுகளை ஏற்படுத்துகிறதா கொரோனா?


கொரோனா ஓய்ந்துவிட்டாலும் அது ஏற்படுத்திய தாக்கம் எதிரொலித்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனா காரணமாக முடி கொட்டுவதாகவும், பாதிக்கப்படுவர்களுக்கு குழப்பமான மன நிலை ஏற்படுவதாகவும் மறதி அதிகரிப்பதாகவும், கவனக்குறை ஏற்படுவதாகும் மருத்துவர்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை கூறுகின்றனர். விறைப்புத்தன்மை கூட ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.


Chandramukhi 2: சந்திரமுகி குறித்து நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த ஜோதிகா.. மிரண்டுபோன ரஜினி.. என்ன நடந்தது?


இந்த நிலையில், நியூயார்க் நகரில் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்திருப்பது பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. நடக்க சிரமப்பட்டு வந்த 62 வயது நபருக்கு மூளைநோயுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் குயின்ஸ் மருத்துவமனை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.


நோயாளிக்கு இறுதியில் ப்ரியான் (மூளையில் புரத துகள்களால் ஏற்படும் நோய்) நோய் இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா காரணமாக அவருக்கு மூளை நோய் ஏற்பட்டிருக்குமோ? என சந்தேகம் கிளம்பியுள்ளது. நோயாளிக்கு சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.


கொரோனாவால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறதா?


ஒரு முறை அல்ல. இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இரண்டு முறையும் அவர் நன்றாக இருப்பதாக முடிவுகள் வந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.


இதுகுறித்து மருத்தவர்கள் கூறுகையில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 3 வாரங்களில், நோயாளிக்கு படிப்படியாக பேச முடியாமல் போனது. மென்மையான உணவுகளை விழுங்குவதில் கூட சிரமப்பட்டார். PEG [பெர்குடேனியஸ் எண்டோஸ்கோபிக் காஸ்ட்ரோஸ்டமி] குழாய் வைக்க வேண்டியிருந்தது. நரம்பு பிடிப்பு, பக்கவாதம் ஏற்பட்டு இறுதியில் உயிரிழந்தார்" என்றார்கள்.


அவரை தாக்கிய கொரோனாவுக்கும் நரம்புத் தளர்ச்சியால் அவர் பாதிக்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கோவிட்-19 நோய்த்தொற்றைத் தொடர்ந்து மூளை நோயால் நோயாளி இறப்பது இது முதல் முறை அல்ல. கொரோனா வைரஸ் தோன்றியதிலிருந்து குறைந்தது மூன்று முறையாவது இது நடந்துள்ளது என்று மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.


இதையும் படிக்க: Asian Games 2023: தாத்தா வழியில் தந்தை.. தந்தை வழியில் மகள்... தலைமுறை தலைமுறையாக பதக்கத்தை வெல்லும் குடும்பம்!