தேவையான பொருட்கள் 


கேழ்வரகு - கால் கப்


சர்க்கரை - 200 கிராம்


நெய் - 100 கிராம்


முந்திரிப் பருப்பு, ஏலக்காய் - தேவையான அளவு


செய்முறை


கேழ்வரகில் உள்ள கல் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து விட்டு,  4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கேழ்வரகை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கேழ்வரகை மெல்லிய துணியை பயன்படுத்தி வடிகட்ட வேண்டும்.


வடிகட்டும்போது சிறிது தண்ணீர்  சேர்த்துக் கொள்ளலாம்.அப்போது தான் கேழ்வரகு பால் வீணாகாமல் முழுமையாக கிடைக்கும்.  வடிகட்டிய பாலை 1 மணி நேரம் தெளிய  விட வேண்டும். தெளிய விட்ட பின் தண்ணீர் மட்டும் பிரிந்து பாத்திரத்தின் மேல் தேங்கி நிற்கும். மேலாக இருக்கும் நீரை மட்டும் பிரித்தெடுத்து கொட்டிவிட வேண்டும். 


அடி கனமான பாத்திரத்தில் கேழ்வரகு பாலை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வைத்துக் கிளறி விட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். ஒற்றைக் கம்பிப் பாகு பதம் வந்ததும் பாகை வடிகட்டி, கேழ்வரகில் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.


பின் ஏலக்காயைப் பொடித்து அதில் சேர்க்கவும். பின் நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அந்த கலவை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.  கையில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கிவிடவும். இதனுடன் முந்திரித் துண்டுகளை நெய்யில் வறுத்துச் சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான ராகி அல்வா தயார். 


(குறிப்பு :சர்க்கரை பாகு தயாரிக்க இரு பங்கு சர்க்கரைக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை நன்கு உருகி நுரை நுரையாக கொதித்து வரும். இப்போது ஒரு டம்ளரில் அரை டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.


சர்க்கரை பாகை ஒரு கரண்டியில் சிறிதளவு எடுத்து  அந்த டம்ளர் தண்ணீரில் , ஒரு துளியை விட வேண்டும். சர்க்கரை கரைசல் கரையாமல் தண்ணீருக்கு அடியில் சென்று முத்துப்போல்  நின்று விட்டால் பாகு பதம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஒருவேளை அந்த சர்க்கரை கரைசல் தண்ணீரில் கரைந்து விட்டால்  மீண்டும் ஓரிரு நிமிடங்கள் அதை பாகு பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.)


மேலும் படிக்க


HBD Prasanna: ‘சாக்லேட் பாய் முதல் ரக்கட் பாய் வரை’ .. வித்தியாசமான கேரக்டரில் அசத்தும் பிரசன்னா பிறந்தநாள் இன்று..!


Nayanthara - Vignesh Shivan: ‘குழந்தைங்க எப்படி பெருசா வளர்ந்துச்சு?’ : நயன் - விக்கியிடம் வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.. ஏன் வன்மம்?