தேவையான பொருட்கள் 


தனியா 2 டேபிள் ஸ்பூன்


மிளகு 1 டேபிள் ஸ்பூன் 


1/2  டேபிள் ஸ்பூன் சீரகம் 


1/2 டேபிள் ஸ்பூன் சோம்பு


4 பட்டை 


4 கிராம்பு 


பட்டை சிறிதளவு


சிறிதளவு ஜாவித்ரி


1 கொத்து கறிவேப்பிலை


செய்முறை


மேற்குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் இதை மிக்சி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


அடுத்தது வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் 6 முதல் 7 காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு வதக்கி விட வேண்டும்


அதனுடன் சிறிது கறிவேப்பிலையை சேர்த்து பொறிய விட வேண்டும். 10 பல் பூண்டை நறுக்கி அதனுடன் சேர்க்க வேண்டும். பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.  பின் பொடியாக நறுக்கிய மூன்று வெங்காயத்தை அதில் சேர்க்க வேண்டும். கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விட வேண்டும். 


இதனுடன் 1 1/2 டேபிள் ஸ்பூன் அளவு இன்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளிகளை சேர்க்க வேண்டும்.


இதனுடன் தேவையான அளவு கல் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கி விட வேண்டும். இதனுடன் முக்கால் கிலோ அளவிலான சிக்கன் துண்டுகளை சேக்க வேண்டும். 5 நிமிடம் வரை வதக்கி விட வேண்டும். தேவையான அளவு மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். அரைத்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்க்க வேண்டும். 


நன்றாக கிளறி விட வேண்டும். லேசாக தண்ணீர் தெளித்து விட்டு இரண்டு நிமிடம் கிளறி விட வேண்டும். பின் மூடி போட்டு 10 நிமிடத்திற்கு வேக விட வேண்டும். இடை இடையே மூடியை திறந்து சிக்கனை கிளறி விட வேண்டும். சிக்கன் வெந்துள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது சிக்கன் பறிமாற தயாராக உள்ளது . இதை சாதத்துடன் சேர்த்து பிரட்டி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.


மேலும் படிக்க,


Parliment Monsoon Session: நம்பிக்கையில்லா தீர்மானம்.. 10 ஆம் தேதி பதிலளிக்கிறார் பிரதமர் மோடி...! முழு விவரம் உள்ளே..!


Kalaignar Womens Assistance: மகளிர் உரிமைத் தொகை; செப்., 17இல் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்