விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் பல வருடங்களாக ஒப்பந்த முறையில் பணி செய்த தூய்மை பணியாளர்கள் 50 வயதிற்கு மேலானவர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு பெண் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க முற்றுகையிட்டு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரம் நகராட்சியில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளர்களாக 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் 65 பேர் 50 வயதினை கடந்து விட்டதால் எந்த முன்னறிவிப்பின்றியும் கடந்த திங்கட்கிழமை பணியிலிருந்து விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமலையே பணியிலிருந்து விடுவித்ததால் நேற்று வழக்கம் போல் தூய்மை பணிக்கு வந்த 65 நபர்களையும் பணியிலிருந்து விடுவித்துள்ளதால் பணிக்கு வர வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 



இதனால் அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் அதிகாரிகளிடம் பணியிலிருந்து விடுவிக்க வேண்டாம் என கெஞ்சி பார்த்தும் மனமிறங்காததால் பாதிக்கபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று வருடங்களுக்காவது ஒப்பந்தபணி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண