பொதுவாக கீரை வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.
கீரை வகைகளில் புளிச்சக்கீரையை ஏராளமானோர் விரும்பி உண்ணாததற்கு அதில் உள்ள அதிகப்படியான புளிப்பு சுவை தான் காரணம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் புளிச்சக்கீரையை செய்து பாருங்க. நிச்சயம் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
புளிச்ச கீரை - ஒரு கட்டு
தனியா - 1 tsp
வெந்தயம் - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
வரமிளகாய் - 20
எண்ணெய் - 5 tsp
உப்பு - 1/2 tsp
செய்முறை
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், வெந்தயம், வரமிளகாய் , தனியா சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.( நல்லெண்ணெயில் செய்தால் சுவை நன்றாக இருக்கும்)
அடுத்ததாக கடாயில் எண்ணெய் விட்டு அலசி வைத்துள்ள புளிச்சக்கீரைரையை சேர்த்து கிளறிக்கொண்டே இருங்கள். அது அப்படியே குழந்து வரும்.
அப்போது அரைத்த பொடியை சேர்த்து கிளறுங்கள். ஈரப்பதம் குறைந்து கெட்டிப்பதம் வந்ததும் மற்றொரு கடாய் வைத்து, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் சிறிது கடுகு சேர்த்து, அரை டேபிள் ஸ்பூன் சீரகம், அரை டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, அரை டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 வர மிளகாய் 10 பல் பூண்டு, ஒரு கொத்து கரிவேப்பிலை ஆகிய பொருட்களை சேர்த்து தாளித்து கிளறி வைத்துள்ள புளிச்சக்கீரையில் சேர்க்கவும்.
பின் கரண்டியால் நன்கு கிளறிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் புளிச்சக்கீரை தொக்கு தயார். இதை சூடான சாதத்துடன் சாப்பிட்டால் சுவை அசத்தலாக இருக்கும்.
புளிச்சக்கீரையில் உள்ள சத்துக்கள்