கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 

காஞ்சிபுரம் ( Kanchipuram Rain ) : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் முடிவடைந்தாலும், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வெப்பம் காரணமாக பொதுமக்களும் வாகனம் ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.



 

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. மாலை வேளையில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டாலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

”தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக


12.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


13.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


 



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.




கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 



கேசிஎஸ் மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) தலா 8, மீ.மாத்தூர் (கடலூர்) 7, காட்டுமயிலூர் (கடலூர்) 6, பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), அடையாறு (சென்னை), கேசிஎஸ் மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), பூந்தமல்லி (திருவள்ளூர்), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), செங்கம் (திருவண்ணாமலை), நம்பியூர் (ஈரோடு), நத்தம் (திண்டுக்கல்) தலா 5, வேப்பூர் (கடலூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), நாமக்கல், ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), உதகமண்டலம் (நீலகிரி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), மலையூர் (புதுக்கோட்டை), புதுக்கோட்டை, பண்ருட்டி ((கடலூர்), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), வடகுத்து (கடலூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), சென்னை விமான நிலையம்  தலா 4, கோத்தகிரி (நீலகிரி), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), எம்ஜிஆர் நகர் (சென்னை), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), சிவகங்கை, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), விருதுநகர் AWS (விருதுநகர்), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பென்னாகரம் (தருமபுரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), விருதுநகர், கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை),  லக்கூர் (கடலூர்), நாகப்பட்டினம், ஆம்பூர் (திருப்பத்தூர்), திருமயம் (புதுக்கோட்டை), சிதம்பரம் (கடலூர்), திருப்பத்தூர், பொன்னனியார் அணை (திருச்சி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), மேற்கு தாம்பரம் SIT (செங்கல்பட்டு), மீனம்பாக்கம் ISRO  (சென்னை), NIOT  பள்ளிக்கரணை (சென்னை) தலா 3.