சிக்கன் பிரெட் ரோல் செய்முறை


தோல் நீக்காத அரைக்கிலோ சிக்கனை குக்கரில் சேர்த்து , கால் கப் தண்ணீர், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு,  அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் குக்கரை மூடி, மூன்றிலிருந்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.


பின் அழுத்தம் குறைந்ததும் மூடியை திறந்து வேக வைத்த சிக்கனை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். வேக வைத்த தண்ணீரையும் தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.  சூடு ஆறியதும் சிக்கனில் சதை பகுதியை கைகளால் பிரித்து எடுக்க வேண்டும். அதை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து போட வேண்டும்.


இப்போ ஒரு பேன் (pan) சூடு பன்னிக்கோங்க. அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து 30 நொடிகள் வதக்க வேண்டும்


பின் பொடியாக நறுக்கிய 1 வெங்காயம்,  ஒரு பெரிய துண்டு நறுக்கிய குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இரண்டில் இருந்து மூன்று நிமிடங்கள் வரை நன்கு வதக்கி விட வேண்டும். பின் அதில்,  அரை டீஸ்பூன் உப்பு, ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.


பின் பிய்த்து வைத்த சிக்கன் துண்டுகளை இதனுடன் சேர்த்து கிளரி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இந்த கலவையுடன் 2 டேபிள் ஸ்பூன் சிக்கன் வேகவைத்த தண்ணீரை சேர்க்க வேண்டும். அப்போது சிக்கனின் சுவை கூடுதல் சுவையுடன் கிடைக்கும். இந்த மசலா ட்ரை ஆகும் வரை சிறிது நேரம் கிளரி விட வேண்டும். 


கடைசியாக அதில் சிறிது நறுக்கிய வெங்காயம் ,வெங்காயத்தாள், கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லியையும்  சேர்த்து கிளறி விட்டு உப்பு சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.  இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளுங்கள் 


இப்போது பிரெட் துண்டுகளை ஒவ்வொறாக எடுத்து அதன் ஓரங்களை லேசாக வெட்டி எடுத்து விட்டு,  தண்ணீரில் நனைத்து அந்த தண்ணீரை ப்ரெட்டை அதிகம் உடைக்காத வகையில் மெல்லமாக பிழிந்து கொள்ள வேண்டும்.


பின்  தயார் செய்து வைத்துள்ள மசாலாவை சிறிதளவு எடுத்து அந்த பிரெட்டின் நடுப்பகுதியில் வைத்து அதை நன்றாக குளோஸ் செய்ய வேண்டும். பின் அதை நம் கைகளால் மெதுவாக பிடித்து உருளை வடிவில் மாற்றில் தட்டில் அடுக்கி கொள்ளுங்கள்.


பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து நன்கு பிட் செய்து கொள்ள வேண்டும். பின் தயார் செய்துவைத்துள்ள துண்டுகளை முட்டையில் நன்கு நனையும்படி பிரட்டி விட்டு, பின் பிரட் கிரம்ஸ்சில் பிரட்டி எடுத்து தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். 


பின் இவற்றை சூடான எண்ணெயில் கோல்டன் ப்ரெளன் நிறம் வரும் வரை நன்கு பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் பிரட் ரோல் தயார். இதை சாஸ் உடன் வைத்து சப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.