திருவண்ணாமலை (Tiruvannamalai News) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருவண்ணாமலைக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் சென்னையில் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர்:


அப்பொழுது ஆளுநருக்கு எதிராக மதிமுக, விசிக,மனிதநேய, மக்கள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கருப்புக் கொடி காட்டினர். பின்னர் நேற்று இரவு திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்து விட்டு இன்று அதிகாலை உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் அண்ணாமலையார் உடனடியாக உண்ணாமுலையாமனை குடும்பத்துடன் தரிசனம் மேற்கொண்டார்.


 


 




Governor RN Ravi: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகத்துக்கு அனுமதி கிடையாது - ஆளுநர் ஆர்.என்.ரவி


பின்னர் அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் நான்காவது லிங்கமாக இருக்கக்கூடிய நிருதி லிங்கத்திலிருந்து குடும்பத்துடன் தமிழக ஆளுநர் காலணிகளை கழட்டிவிட்டுட்டு நடந்து சென்று கிரிவலம் மேற்கொண்டார். பின்பு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியினர் பள்ளியில் பழங்குடியினர் மாணவர்கள் மற்றும் பழங்குடிய மக்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் அனைவரும் ஆளுநருக்கு பூக்கள் தூவி வரவேற்றனர். 




அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி:


அப்பொழுது திடீரென மழை கொட்டியது. கொட்டும் மழையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அப்போது வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும், உலக நாடு இந்தியாவை உற்று நோக்கி கொண்டுள்ளது. இந்தியா வளர்ந்த மாநிலமாக உள்ளது. ஒவ்வொரு மாணவர்களும் படித்து முடித்த பிறகு படித்த முன்னாள் மாணவர்கள் குழு அமைத்து தான் படித்த பள்ளிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என மாணவர்கள் மத்தியில் பேசினார்.


மேலும் இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு காந்தியின் கொள்கை தேவைப்படுகிறது. காந்தியின் கொள்கை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் பெரிய அளவிலான கனவுகளை காண வேண்டும் என தெரிவித்தார். ஜவ்வாது மலையில் சந்தன வாசனை வீசும் என்று கூறினார்கள். ஆனால் தற்பொழுது சந்தன வாசனை வீசவில்லை என்றும் அந்தக் குறை இருந்ததாகவும் மாணவர் செல்வங்களை பார்த்தவுடன் அந்த குறையும் நிறைவேறியதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.