மனிதர்கள் இன்னும் இன்னும் வேகமாக ஒடுகிறோம். வாழ்க்கை இன்னும் பரபரப்பாக மாறி வருகிறது. இதற்கிடையில், ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது சாத்தியமற்றது. சோர்வு, எரிச்சல் எல்லோரையுமே தொற்றிக்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு 'பர்ன்அவுட்' என்னும் வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். சரியாக நிர்வகிக்கப்படாத பணியிட தொடர்பான மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் ஒரு நோய்க்குறியை அவர்கள் இப்படி அழைக்கின்றனர். நீடித்த வேலை அழுத்தம், நாள்பட்ட சோர்வு, பணிக்கு வராமல் இருப்பது, போன்றவற்றை ஏற்படுத்தும் என்று அறிக்கை மேலும் கூறுகிறது.



இதனை தவிர்க்க வேலையின் இடையே பிரேக் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானது. அதனால் மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது, செயல்திறனை மேம்படுத்துகிறது என்று கூறுகிறார்கள். இது சோர்வைக் குறைக்கவும் உதவும் என்று குறிப்பிடுகிறது. வேலையின்போது ஓய்வு எடுக்கும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம்.


தொடர்புடைய செய்திகள்: 40 வயது பெண்ணுடன் உடலுறவு.. முதியவர் அதிர்ச்சி மரணம் - மாத்திரையா, மதுவா? விசாரணை தீவிரம்!


படைப்பாற்றலை அதிகரிக்கிறது


ஓய்வெடுக்க நேரத்தைக் கண்டுபிடிக்காமல் தொடர்ந்து வேலை செய்தால், அது ஆக்கப்பூர்வமாக வேலை செய்யும் திறனைத் தடுக்கிறது. ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது, புதிய யோசனைகளை கொடுக்கும், படைப்பாற்றல் அதிகரிக்கும்.


மன அழுத்தத்தை குறைக்கும்


தொடர்ந்து வேலை செய்வது மன அழுத்தத்திற்கு வித்திடும். மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். அடிக்கடி சிறிது நேரம் ஓய்வு எடுப்பது மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்கவும், உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கவும் உதவும்.



நினைவாற்றல் அதிகரிக்கும்


ஒவ்வொரு நிமிடமும் நம் மூளை புதிய தகவல்களைப் பெற்றுக்கொண்டே இருக்கிறது. இதனால் எல்லா விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது கடினமாகிறது. மூளைக்கு ஓய்வெடுக்க சிறிது நேரம் கொடுப்பது, நாம் அதிகம் கற்றுக் கொள்ளவும், தகவலைத் தக்கவைக்கவும் உதவுகிறது.


கவனம் அதிகரிக்கும்


யாராலுமே நீண்ட நேரம் உட்கார்ந்து திறமையாக வேலை செய்ய முடியாது. நீண்ட நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. சிறிது நேரம் ஓய்வெடுப்பது, நம் கவனத்தை மீட்டெடுக்கும். நம் திட்டங்களை மறு பரிசீலனை செய்ய அனுமதிக்கும். ஒரு வேளை நாம் செய்த பாதை சரி இல்லை என்றால் அதனை உணரச் செய்யும். 


எனவே இனிமேல் நீங்கள் வேலை செய்யும்போது சோர்வாக உணர்ந்தாலோ, ஓய்வு தேவைப்பட்டாலோ, ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொள்ளலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.