சில்லுக்கருப்படியில் மனங்களைக் கவர்ந்த நிவேதிதா சதீஷ் தனது ஹெல்த் டிப்ஸை பகிர்ந்துள்ளார் .நடிப்பு , நடனம் தவிர்த்து நிவேதிதாவிற்கு நாட்டம் அதிகமாக இருக்கும் மற்றொரு விஷயம் சரியாக சாப்பிடுவது மற்றும் ஊட்டச்சத்தை சரியாக எடுப்பது என்கிறார். சரியான உணவை சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் என்பதுதான் இவரின் ஹெல்த் மந்திரம். "என் அம்மா ஒரு ஊட்டச்சத்து நிபுணர், இந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குழந்தை பருவத்திலிருந்தே என்னுள் ஊடுருவியுள்ளது என்று நினைக்கிறேன். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. ஆரோக்கியமற்ற விஷயங்களை நான் தானாகவே விரும்பியது இல்லை. நான் இன்று வரை கூல் ட்ரிங்கிங்ஸ் குடித்ததே இல்லை. அவற்றின் சுவை எப்படி இருக்கும் என்றுகூட எனக்கு தெரியாது .
நான் தேநீர் அல்லது காபி குடிப்பதில்லை. இவை எனது குழந்தை பருவத்திலிருந்தே நான் பின்பற்றிய விஷயங்களில் ஒன்று. சத்தான உனைவுகளை சாப்பிடுவதினால் கடினமான காலங்களில், அதாவது இப்பொது இருக்கும் சூழலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் என்னால் அதிகம் போராட முடிகிறது. என்னுடைய பிட்னஸ்ஸின் அடுத்த ரகசியம் நான் ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்சன் “நான் கராத்தேவில் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளேன். கதக் கற்றுக்கொண்டேன், தொடர்ந்து நடனமாடுகிறேன். நான் ஜிம்மிற்கு செல்லும் நபர் அல்ல. ஆனால் தினமும் யோகா செய்கிறேன். தினமும் உங்களால் ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டாலும், குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உங்கள் இதயத்தையும் நுரையீரலையும் நல்லபடியாக வைத்திருக்கும்.
நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், எனது வாழ்க்கை முறை காரணமாக நான் அதிக அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் இல்லாமல் சீக்கிரம் மீண்டுவந்தேன் என்று கருதுகிறேன். பெரும்பாலான உயர்நிலைப் பள்ளி குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பிடாததால் அல்சர் பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பிரவுனிகள் அல்லது பீட்ஸாக்களை விரும்பினால் பரவாயில்லை,ஆனால் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதுதான் தவறு. நல்ல உணவு பழக்கம்தான் ஆயுளுக்கு வழி” என்கிறார்