ப்ரஷர் குக்கரில் சீக்கிரம் உணவு வேக டிப்ஸ்..


ப்ரஷர் குக்கரில் நாம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை வேக வைப்போம். இப்படி வேக வைக்கும்போது குக்கரில் நாம் ஒரு கொட்டாங்குச்சியை சேர்த்தால் வழக்கமாக 4 விசிலில், வேகும் பருப்பு 2 விசிலில் வெந்துவிடும். நாம் கொட்டாங்குச்சியின் பின் உள்ள சிரட்டையை கம்பி நார் கொண்டு தேய்த்து விட்டு பின் பிரஷர் குக்கரை வழக்கம்போல் மூடி வேக வைக்கவேண்டும்.


மட்டன் உள்ளிட்டவை வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதை வேக வைக்கும்போது கொட்டாங்குச்சி சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். 


மிக்ஸியில் உள்ள கறைகளை சுத்தம் செய்யணும்..


நாம் மிக்ஸியில் தினந்தோறும் பல்வேறு பொருட்களை அரைப்போம். இதன் கறைகள் அனைத்தும் மிக்ஸி மீது படிந்திருக்கும். இதை நீங்கள் எளிதில் சுத்தம் செய்யலாம். ஒரு ஸ்பாஞ்சை தண்ணீரில் நனைத்து லேசாக பிழிந்து விடவும். ஸ்பாஞ்ச் மீது சிறிது பல் தேய்க்கும் பேஸ்ட்டை சேர்த்து, இதைக் கொண்டு மிக்ஸியை துடைத்தெடுத்தால், மிக்ஸியில் உள்ள அனைத்து கறைகளும் நீங்கிவிடும்.


பின் ஒரு ஈரத்துணியை கொண்டும் மிக்ஸியை துடைத்துவிடலாம். மிக்ஸியின் இடுக்குகளில் உள்ள அழுக்கை பயன்பாட்டில் இல்லாத பழைய பல் தேய்க்கும் ப்ரஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். இப்படி சுத்தம் செய்தால் மிக்ஸி பளிச்சென மாறிவிடும். 


எலுமிச்சைப் பழத்தில் நன்றாக சாறு பிழிய..


நாம் எலுமிச்சைப் பழத்தை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைப்போம். அப்படி ஸ்டோர் செய்து வைத்த எலுமிச்சையை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து மீண்டும் வெட்டிப் பிழியும்போது, அது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் சரியாக சாறு பிழிய முடியாது. இப்படி ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கும் எலுமிச்சைகளை இரண்டு நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு வைத்து பின்பு எடுத்து வெட்டி சாறு பிழிந்தால் நன்றாக சாறு வரும். பிழிவதற்கும் எளிமையாக இருக்கும். 


மேலும் படிக்க 


PM Modi On Mutton Eating : "மக்களின் உணர்வுகளை புண்படுத்துறாங்க" மட்டன் சாப்பிட்ட ராகுல் காந்தி.. சாடும் பிரதமர் மோடி


Flashback: ரஜினியை பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்.. இதே நாளில் சக்கைபோடு போட்ட மோகன் படம்! வெற்றி யாருக்கு?