பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சியளித்தார்.


 




 


பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அருள் பாலித்து வரும் ஆறுமுக சுவாமி, வள்ளி ,தெய்வானைக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக உற்சவர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 


 




மேலும், சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு வெள்ளி மயில் வாகனத்தில் ஆறுமுகம் சாமி, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். 


 


 




 


அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்த ஆறுமுகம் சுவாமி வள்ளி தெய்வானைக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினார். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு நடைபெற்ற ஆறுமுகசாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.