பெங்காலி உணவுகள் மிகவும் புகழ் பெற்றது. இதற்கு காரணம் இதன் சுவையும், இதில் உள்ள ஏராளமான வெரைட்டிகளும் தான். அசைவம் சாப்பிடுபவராக இருந்தாலும், சைவ உணவு உண்பவராக இருந்தாலும், பெங்காலி உணவில் சாய்ஸ்கள் ஏராளம். பெங்காலி உணவுகள் கிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள வங்காளப் பகுதியின் பாரம்பரிய உணவாகும். பெங்காலி உணவு பல்வேறு மசாலா மற்றும் சுவையூட்டிகள் மற்றும் புதிய பொருட்களைப் பயன்படுத்தி சமைக்கப்படுவதால் அது அபரிதமான சுவையை கொண்டுள்ளது. தற்போது நாம் கத்தரிக்காயை பயன்படுத்தி பெங்காலி பீகன் பைஜன் எப்படி செய்வது என பார்க்கலாம். மீன் துண்டுகள் பொறித்து வைத்ததை போன்று பார்ப்பதற்கே அட்ராக்டிவாக இருக்கும். சுவையும் அசத்தலாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 கத்தரிக்காய் (பெரியது)
மிளகாய்த்தூள்-
செய்முறை
ஸ்டெப் 1
முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி வட்டவட்டமாக நறுக்கி கொள்ளவும். ஒரு பவுலில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து அதில் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
மசால் தடவிய கத்தரிக்காய் துண்டுகளை அரிசிமாவில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவு தான் சுவையான பெங்காலி பீகன் பைஜன் ரெடி. இதை ரசம் சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். காரசாரமான சுவையில் அசத்தலாக இருக்கும்.
மேலும் படிக்க,
Por Thozhil OTT Release: தியேட்டரில் 50 நாள்களைக் கடந்த ’போர் தொழில்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!