அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்டம் தியேட்டரிலேயே 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 75 நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தையும் இதுவரை தியேட்டரில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் எப்போ என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போர் தொழில் படம், கடந்த மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டில் வெளிவந்த மிக சிறந்த படங்களில் போர்தொழிலும் ஒன்று என சினிமா ரசிகர்களால் பராட்டைப் பெற்ற படம் இது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பின்பும் இப்படம் வசூலிலும் மக்களின் வரவேற்பிலும் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளில் சுமார் 85 லட்சம் வரை வசூல் செய்த இந்த திரைப்படம் தற்போது வரை கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. படம், சுமார் 6 காேடி செலவிலேயே தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம் பார்க்க விரும்புவர்கள் போர் தொழில் படத்தை தாராளமாக பார்க்கலாம் என படம் பார்த்தவர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது க்ரைம் த்ரில்லர் கதையா அல்லது பேய் படமா என்னும் அளவுக்கு பின்னணி இசையில் ஜேக்ஸ் பிஜோய் மிரட்டியுள்ளார்.
போர் தொழில் படத்திற்கு கோலிவுட் ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பினை அளித்துள்ளனர். இப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள சரத்குமார் மற்றும் அசோக் செல்வனுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழில் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களில் ‘ராட்சசன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தை பார்த்த அனுபவத்தை போர் தொழில் படம் கொடுத்ததாக படம் பார்த்த பலர் தெரிவித்தனர். இந்த படத்தை இயக்கிய புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் ராஜா , கமல் நடிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை பார்த்தில் இருந்து தனக்கும் சைக்கோ கில்லர் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க,