இந்த உலகம் மிகவும் விசித்திரமானது. பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாட்டைக் கொண்ட இங்கு பல்வேறு விதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி கொண்டாடப்படும் அந்த பண்டிகைகள் குறிப்பிட்ட ஒன்றிற்கு சொந்தமானதாக பார்க்கப்படும்.
ஆனால், உலகம் முழுவதும் ஒரு சில தினங்கள் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும். அதிலும் குறுப்பாக அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதர, சகோதரர்கள் தினம் உள்ளிட்டவை கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.
மேலும், காதலர் தினமும் இந்தியா போன்ற மேற்க்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றக்கூடிய நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனாலும், சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
கதை இப்படி இருக்க சில நாடுகளில் ’காதலன் தினம்’ என்று ஒரு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்:
தேசிய காதலன் தினம் 2023
உலகம் முழுவதும் ‘காதலர் தினம்’ பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் சூழலில், ‘காதலன் தினம்’ அக்டோபர் 3 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இது 1990 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தாலும், காதலர் தினத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த ’காதலன் தினத்திற்கு’ கிடைக்கவில்லை. எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் காதலன் தினத்திற்கான வரவேற்பு காதலிகள் மத்தியில் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான வாழ்த்துச் செய்திகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்ததே இதற்கான எடுத்துக்காட்டு.
அக்டோபர் 3 ஆம் தேதியான இந்த நாளை காதலிகள் தங்களது அன்புக்குரிய காதலனுக்காக அர்ப்பணிக்கின்றனர். எனவே நீங்களும் காதலித்தால் உங்கள் காதலனுக்கான இந்த தினத்தில் அவருடன் கொண்டாடலாம்.
தேசிய காதலர் தின புகைப்படங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை உங்கள் அன்புக்குரிய காதலனுக்கு வாட்சாப்பிலோ அல்லது மற்ற சமூக வலைதளங்களிலோ அனுப்பி அவர்களை சர்ப்ரைஸ் செய்யலாம்.
காதலர் தின வாழ்த்து செய்திகள்
“என் காதலனாக நீங்கள் என் அருகில் இருப்பதே எனது பலம், உங்கள் அன்புக்கு நான் எப்போதும் கடமைபட்டுள்ளேன். உங்கள் அன்புக்கு நன்றி”
”ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் என்னை நினைப்பதன் மூலம் என் அன்பை முழுவதும் பெற்று விட்டீர்கள். இனிய காதலன் தின வாழ்த்துகள்”
”நாம் இது போன்று எப்போதும் மாறாத அன்புடன் ஒன்றுமையுடன் இருப்போம், என் இனிய காதலனை இந்த தினத்தில் வாழ்த்துவதில் நான் பெருமை படுகிறேன்.
காதலன் தின கொண்டாத்திற்கான யோசனைகள்
உங்கள் காதலனிடம் அன்பைக் காட்ட நீங்க கீழ்க்கண்ட இந்த யோசனைகளை முயற்சி செய்து பார்க்கலாம்:
* உங்கள் காதலனுக்கு கடிதம் எழுதுங்கள். அதில் உங்களது உணர்வுக்கு எழுத்துக்களால் வண்ணம் தீட்டுங்கள்.
* அவருக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
* உங்கள் காதலனுக்கு பிடித்தமான ஒன்றை பரிசளியுங்கள்.
* உங்கள் காதலனுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அப்படி நீங்கள் செல்லும் இடத்தில் நடக்கும் அனுபவங்களை குறிப்புகளாக எழுதி அவருக்கு பரிசளியுங்கள்.
இப்படி நீங்கள் இந்த காதலன் தினத்தை கொண்டாடி மகிழலாம்.
மேலும் படிக்க: ODI World Cup 2023: உலகக்கோப்பையில் கவனிக்க வேண்டிய ஐந்து வீரர்கள்! முதல் இடத்தை தட்டித்தூக்கிய ”ரன் மிஷின்” விராட் கோலி!
மேலும் படிக்க: Bigg Boss Promo: சாப்பாட்டால் வெடிக்கப்போகும் மோதல்.. சண்டைக்கோழியாக மாறிய பிரதீப் ஆண்டனி.. சூடுபிடிக்கும் பிக்பாஸ்!