மழை காலம் தொடங்கி விட்டாலே, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கும்.  தெருக்களில் தண்ணீரை வழிந்தோடும், எங்கே சாக்கடை இருக்கிறது, எங்கே பள்ளம் இருக்கிறது, எங்கே ரோடு இருக்கிறது என தெரியாமல், மழை தண்ணீர் வெள்ளமாக இருக்கும். இந்த நேரத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுவது மிகவும் சவாலான விஷயம் ஆக இருக்கும்.


தெருக்களில் சேர்ந்து இருக்கும் தண்ணீரினால், வாகன பழுது ஆதல், கோரவிபத்துகள், ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க நிறைய வழி முறைகள் இருக்கிறது.




தண்ணீர் நிறைந்து இருக்கும் சாலைகளில் செல்லும் போது , கவனத்தில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்



  • டயர்கள் மற்றும் பிரேக்குகள் சரியான நிலையில் இருக்கிறதா என சரி பார்த்து கொள்ள வேண்டும்.

  • வண்டியில் ஆயில், அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • முன் விளக்குகள், இண்டிகேட்டர் விளக்குகள் , சிவப்பு விளக்குகள் அனைத்தும் சரி செய்து வைத்து கொள்ள வேண்டும்.

  • வண்டியில் இருக்கும் ஒயர்கள் அனைத்தும் சரியான இணைப்புடன் இருப்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும்.

  • செயின் அனைத்தும் எண்ணெய் ஸ்மூத்தாக வைத்து கொள்ள வேண்டும்.

  • வீட்டிற்கு வந்த பிறகும் இதை எண்ணெய் ஊற்றி செயின் ஈரப்பதம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.


ஒயின் குடித்தால் ஒயிட் ஆகலாம் என்பது உண்மையா? வெயிட்... இது தான் ரைட்!


எந்த வகையான விதிகளை பின்பற்ற வேண்டும், எதை செய்ய கூடாது, சாலைகளில் நடுவில் மாட்டி கொண்டால் என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் தெரிந்து இருக்க வேண்டும்.


                      


ஒரு சாலையை  தேர்வு செய்யும் போது அந்த சாலையில் அடிக்கடி பயணம் செய்பவராக இருக்க வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால் அந்த சாலையை விட்டு மாற்று வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், இது பைக்கின் பாஷ் கார்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு  குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக தண்ணீரில் பைக் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும் நமக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்கு, நமது வாகனத்திற்கு குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.




ஒரு வேளை நீரில் மூழ்கி வாகனம் நாடு தெருவில் நின்றால் , பீதி அடையாமல் இருக்க வேண்டும். முதலில் வாகனம் நீரில் மூழ்கி நின்று இருந்தால் மீண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம். தண்ணீர்  இன்ஜினில் நுழைத்து மின்னணு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதில் பாதுகாப்பாக  இருக்க வேண்டும். 


Chicken Nuggets | சுவையான, சத்தான சிக்கன் நகெட்ஸ் - சண்டே ஸ்பெஷல் ரெசிபி!