ஒயின் எடுத்து கொள்வதால் உடலுக்கு  நிறைய நன்மைகள் கிடைக்கும். இது பல பழங்களில் இருந்து தயாரிக்கலாம். இதன், சுவை, மணம் , நிறம்  என ஒவ்வொன்றும் ஒரு பழத்திற்கு தகுந்தாற் போல், மாறுபடும். ஒயின் எடுத்து கொள்வதால் தோலின் நிறம் மாறுபடும். தோலின் ஆரோக்கியம்  மேம்படும். தினம் ஒயின் குடிப்பதாலும், ஒயின் பேஷியல் செய்வதாலும், தோலிற்கு பல பயன்கள் கிடைக்கும்.




திராட்சை தோலில் இருக்கும், ரெஸ்வெராட்ரோல் எனும் ஆண்டிஆக்ஸிடென்கள் தோலில் வயதான தோற்றம் வராமல் இருக்கும். அந்தோசயினின்கள் போன்ற ஃபிளாவனாய்டுகள் தான் ஒயின் க்கு நிறத்தை தருகின்றன. புரோந்தோசயனிடின்கள் எனும் வேதியல் காம்பௌண்ட் ஆனது தோலிற்கு கொலாஜென் போன்று செயல்படுவதால் இளமையாகவும், சுருக்கமில்லாத சருமத்திற்கும் பயன்படும்.


முகப்பரு வராமல் தடுக்கும் - முகப்பரு வருவதற்கு சில குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் தான் கரணம். ஒயின் எடுத்து கொள்வது, இந்த பாக்டீரியாக்கள் வளர்ச்சியை குறைக்கும். முகத்திற்கு பேஷியல் செய்து கொள்ளலாம்


வயதான தோற்றம் வராமல் இருக்கும் - தோலில் சுருக்கம் விழாமல் இருக்கும். மேலும் ரெஸ்வெராட்ரோலின் பண்புகள் தோலை பளபளப்பாக வைக்க உதவும். இது UV கதிர்களால் தோலில் ஏற்படும், மாற்றங்கள் வராமல் தடுக்கும்.


வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால், தோலில் நிறம் மாறுபடும். வெயிலினால் தோலினால் நிறம் கறுப்பாகவோ, அல்லது அடர் நிறமாகவோ இருந்தால் ஒயின் பேஷியல் செய்வது உதவியாக இருக்கும். தினம் ஒயின் எடுத்து கொண்டாலும், தோலின் நிறத்தை பாதுகாக்கலாம்.


தோலை நாள் முழுவதும் புத்துணர்வுடனும், ஈரப்பதத்துடன் வைக்கவும், தோலை பார்ப்பதற்கே பளபளப்பாக வைக்கும்.


இப்போது பல வகைகளில் இந்த ரெட் ஒயின் பயன்படுத்தபடுகிறது. இது, பேஷியல்  செய்யவும், முகத்தை கழுவுவதற்கு, ஒரு காட்டனில் ஒயினை நனைத்து முகத்தை துடைப்பதும்,தோலில் சுருக்கம் விழாமல் இருக்கும்.




தோல் மட்டும் இல்லாமல் உடல் முழுவதற்கும் இந்த ரெட் ஒயின் பல ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது.


பல மருத்துவ ஆராய்ச்சிகளில், ஒயின் ஆனது, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும்  இரத்த அழுத்தம், உடலில் கெட்ட  கொழுப்பின் அளவு, நீரழிவு நோய் வராமல் தடுக்கிறது. மேலும்  வளர்சிதை மாற்ற நோய்கள் வராமல்  பாதுகாக்கும்.


இத்தனை பயன்கள் இருக்கும் இந்த ஒயின் ஆனது தினம் எவ்வளவு எடுத்து கொள்ளலாம். அது தான் நிறைய நன்மைகள் தருகிறதே என அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அமிர்தமாகவே இருந்தாலும் அளவுக்கு  அதிகமானால் அது நஞ்சாக தான் மாறும். அதனால் ஒரு நாளைக்கு 125 mL என  இரண்டு நேரங்கள் எடுத்து கொள்ளலாம். அதாவது ஒரு நாளைக்கு மொத்தமாக 250 mL மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் எடுத்து கொள்வதை விட இரண்டு நேரம் எடுத்து கொள்வது நல்லது.