நாம் சில துணிகளை ஆசை, ஆசையாய் வாங்கி இருப்போம்.  அவை ஒரு சில முறைகள் மட்டுமே உடுத்திய பின் நிறம் மங்கி போயிருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.  துணிகளை முறையாக பராமரித்தால் அவற்றை நீண்ட நாட்கள் புதிது போன்று பயன்படுத்த முடியும். துணி சாயம் போனால், மங்கி விடும். 


துணி நீண்ட நாள் உழைக்க:


அதிக நேரம் வெயிலில் காய வைத்தால் மங்கி விடும். துணிகளை வாஷிங் மெஷின் பயன்படுத்தாமல் கைகளில் துவைத்தால் அவை நீண்ட நாட்கள் உழைக்கும். துணிகளை காயவைக்கும் போது உட்புறமாக திருப்பி காய வைக்க வேண்டும். இப்படி காயவைப்பதன் மூலம் நிறம் சீக்கிரம் மங்கிப்போகாமல் இருக்கும்.


ஒருவேளை உங்களின் ஃப்பேவரெட் உடையின் நிறம் வெளுத்துப்போனால் அவற்றை மீண்டும் புதிய துணியை போன்று மாற்ற முடியும். வெளுத்துப்போன துணிகளை எப்படி மீண்டும் புதிது போல் மாற்றுவது என்று பார்க்கலாம். 


இரண்டு பெரிய பாத்திரங்களில் தனித்தனியாக தண்ணீரை சுட வைத்துக் கொள்ள வேண்டும். மிதமான அளவு சூடானால் போதும். தண்ணீர் கொதிக்க கூடாது.  கையில் தொட்டு மிதமான சூட்டை உணரும் அளவு சூடு இருந்தால் போதும்.  இப்போது நம் செயல்முறையை துவங்கலாம்.


கல் உப்பு


நிறம் மங்கி போன துணிகளை  புதிது போன்று மாற்றுவதற்கு  மூன்று பொருட்கள் தேவை. அவை சுடு தண்ணீர், கல் உப்பு மற்றும் சாயத் தூள் ஆகும். முதலில் வாளியில் இருக்கும் சுடு தண்ணீரில் ஒரு கைப்பிடி கல்லுப்பை போட வேண்டும். உப்பு கரைந்ததும் உங்களுக்கு வேண்டிய நிறத்திலான சாயத் தூளை தண்ணீரில் போட வேண்டும். கையை வைத்து கலக்காமல் ஏதேனும் உறுதியான குச்சையை வைத்து தண்ணீரை நன்கு கலக்கி விட வேண்டும்.


சாயத் தூள்


துணிகளுக்கு பயன்படுத்தப்படும் சாயத் தூள் மளிகை கடை உள்ளிட்ட கடைகளிலேயே கிடைக்கும்.  வெறும் 10ல் இருந்து 20 ரூபாய் விலையிலேயே சாயத்தூள் கிடைக்கும். நீங்கள் கொஞ்சம் அடர் நிறங்களில் இருக்கும் சாயத் தூள்களை பயன்படுத்தலாம். உங்களுக்கு லைட்டான நிறம் வேண்டும் என்றால் நீங்கள் அதையும் பயன்படுத்தலாம். கருப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்கள் கொஞ்சம் எடுப்பாக இருக்கும். சாயத் தூள்களை குழந்தைகள் கண்களில் படாதபடி வைக்க வேண்டும்.  அதேபோன்று நீங்கள் இந்த செயல்முறையை செய்யும் போது குழந்தைகள் பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 


துணியை உலர்த்தி எடுக்க வேண்டும்


சாயம் கலந்த தண்ணீரில் குறைந்தது 20 நிமிடங்கள் வரை துணிகளை ஊறவிட வேண்டும். அதை  எடுத்து நிழலில் உலர்த்தி எடுக்க வேண்டும். நன்றாக உலர்ந்த பின் பார்த்தால் சாயம் போட்ட ஆடைகள் புதியது போன்று இருக்கும். இதை நீங்கள் இஸ்திரி போட்டு மடித்து வைத்துக்கொள்ளலாம். இந்த ஆடைகளை அடுத்தடுத்து நீங்கள் துவைக்கும் போது சாயம் போகத்தான் செய்யும். மீண்டும் வெளுத்துப் போகும் நிலைக்கு வந்தால், ஆடைகளுக்கு மீண்டும் சாயம் போட்டுக் கொள்ளலாம். 


மேலும் படிக்க,


Governor Tea Party: கனமழை எச்சரிக்கை எதிரொலி - சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு - ஆளுநர் மாளிகை தகவல்


President Speech: பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: சுதந்திர தின உரையில் குடியரசு தலைவர் கோரிக்கை