காதலர் தினத்தை தொடர்ந்து வரும் காதலர் எதிர்ப்பு தினத்தில் இன்று பிப்ரவரி 16 ஆம் தேதியை கிக் டே-யாக கொண்டாடுகிறார்கள்.


ஆன்டி-வேலன்டைன் வாரம்


பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்திற்குப் பிறகு, மக்கள் பிப்ரவரி 15 முதல் காதலர் எதிர்ப்பு வாரத்தைக் கொண்டாடுவது வழக்கம். கடந்த வேலன்டைன் வாரம் பல சிங்கிள்களுக்கு எரிச்சலூட்டும் வாரமாக இருந்திருக்கலாம், ஆனால் பல காதலர்கள், உணவகங்கள் மற்றும் பல இடங்களுக்கு தங்கள் இணையரை அழைத்து சென்று அன்பை பாசத்தை முழுவதுமாக வெளிப்படுத்துகின்ற வாரமாக இருந்தது.


அதனை எப்படி காதலர்கள் ஒரு வாரம் காதல் ததும்ப ததும்ப கொண்டாடுகிறார்களோ அதே போல இதுவும் ஒரு வாரம் வன்மம் ததும்ப ததும்ப கொண்டாடப்படுகிறது. இதில் ஸ்லாப் டே, கிக் டே, பெர்ஃப்யூம் டே, ஃப்ளர்ட் டே, கன்ஃபெஷன் டே, மிஸ்ஸிங் டே மற்றும் பிரேக்அப் டே என்று ஏழு நாட்கள் உள்ளன. 



கிக் டே


எல்லோருமே காதலர் தினத்தை கொண்டாடுவதில்லை என்பதால் இந்த பிப்ரவரியை மற்றவர்களும் கொண்டாட உருவாக்கப்பட்டதுதான் சிங்கிள்கள் கொண்டாடும் காதலர் எதிர்ப்பு வாரம் அதாவது ஆன்டி வேலன்டைன்ஸ் டே. இந்த வரிசையில் இரண்டாவது நாள்தான் இந்த கிக் டே. காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாவது நாள் அதாவது, பிப்ரவரி 16-ஐ சிங்கில்கள் கிக் டே என்று கொண்டாடுகின்றனர்.


Watch Video : நடுரோட்டில் தகராறு: தரதரவென இழுத்து இளைஞரை குத்திக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பல் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி...!


ஏன் இந்த கிக் டே?


கிக் டே என்பது எதிர்மறையான உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தைரியத்தை அளிக்கும் ஒரு முக்கியமான நாள். இந்த நாளில், உங்கள் எக்ஸ்-காதலர் உங்கள் வாழ்க்கையில் விட்டுச்சென்ற அனைத்து எதிர்மறைகளையும் அகற்ற தயாராக வேண்டும். நீங்கள் எல்லா மகிழ்ச்சிக்கும் தகுதியானவர், அந்த இலக்கை அடைவதை முன்னாள் காதலர்களின் அந்த எதிர்மறை நினைவுகள் தடுக்கக்கூடாது.



எதிர்மறை விஷயங்களை உதைத்து தள்ளுங்கள்


கூடுதலாக, அவர்களிடமிருந்து உங்களுக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் அவர்களை நியாபகப்படுத்தும் பொருட்களை அகற்ற வேண்டும். வெளிப்புற உலகில் உள்ள அனைத்தையும் கைகள் கொண்டு அகற்றிவிடலாம், ஆனால் அக உலகிற்கு கைகள் இல்லை, கொஞ்சம் முயற்சி செய்துதான் அந்த நினைவுகளை அகற்ற வேண்டும். அவற்றை உதைத்துத் தள்ளும் மன உறுதியை தருவதுதான் இந்த நாள். இந்த நாள் முக்கியமாக ஒரு டாக்சிக் உறவில் இருந்து வெளியேறிய பிறகும் நம்மை சுற்றிவரும் எதிர்மறை உணர்ச்சிகளை உதைப்பதைக் குறிக்கிறது.


கெட்ட விஷயங்களை தூக்கி எரிவதன் மூலம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும். கெட்ட பழக்கங்கள், சுய சந்தேகங்கள் மற்றும் வாழ்க்கையில் முன்னேறாமல் நம்மைத் தடுக்கும் நச்சுத்தன்மையுள்ள அனைத்தையும் வெளியேற்றுவதுதான் இதன் பொருள். ஆனால் எக்ஸ் இல்லாத நாங்கள் என்ன செய்வது என்று பலர் கேட்பது கேட்கிறது. இன்னும் கமிட் ஆகவில்லை என்ற சோகம் இருந்தால் அதனை கூட உதைத்து தள்ளலாம், இல்லையென்றால் வேடிக்கையாக, இந்த நாளை நண்பர்கள் ஒருவரை ஒருவர் உதைத்துக்கொண்டும் விளையாடுகிறார்கள், அப்படியும் இந்த நாளை கொண்டாடலாம்.