Watch Video : நடுரோட்டில் ஏற்பட்ட தகராறில் 10 பேர் கொண்ட கும்பல், இளைஞரை சராமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி நங்லோய் பகுதியில் உள்ள சாலையில் 25 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நங்லோய் பகுதியைச் சேர்ந்தவர் சாஹில் மாலிக் (25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி விஷால் மாலிக். 


சாஹில் மாலிக்கின் சகோதரரான விஷால் மாலிக், ஜிம்மில் இருந்து  இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது நங்லோய் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, விஷாலின் இருசக்கர  வாகனம் அவருக்கு முன் இருந்த பேருந்து மீது மோதியது. இதனால் சம்பவ இடத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. 


இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த 10 பேர் கொண்ட கும்பல் விஷாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் சிறிது நேரம் கழித்து கைகலப்பாக மாறியது. பின்பு, 5 பேர் கொண்ட கும்பல் விஷாலை தாக்கினர். இதனால் அவர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.  தொடர்ந்து 10 பேர் கொண்ட கும்பல் விஷாலை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.


இதனை அடுத்து, விஷா நங்லோய் பகுதியில் காவல்நிலையத்திற்கு சென்றார். அப்போது காவல்துறையினர் உதவி செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஷால் தனது சகோதரரான சாஹில் மாலிக்கை தொடர்பு கொண்டு நடந்தவற்றை எல்லாம் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து தனது இருசக்கர வாகனம் சம்பவ இடத்தில் இருக்கிறது. அதனை கொண்டு வர வேண்டும் என்று சாஹிலிடம் கூறினார். இதனால் சாஹில் சம்பவ இடத்திற்கு சென்று இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது அந்த இடத்தில் இருந்த 10 பேர் கொண்ட கும்பல் சாஹிலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு, வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், சாஹிலை அந்த 10 பேர் கொண்ட கும்பல் தரதரவென இழுத்து கத்தியால் சராமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன.






இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியானது.  இதனை அடுத்து போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக டிசிபி ஹரேந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார்.