சமூக வலைதளஙளில் எப்போதும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக பாம்புகளுடன் ஒருவர் விளையாடுவது தொடர்பான வீடியோ என்றால் அது வைரலாவது நிச்சயம். அந்தவகையில் தற்போது ஒருவர் பாம்பு உடன் விளையாடி விபரீதத்தில் சிக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 


கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிர்சி என்ற 20 வயது இளைஞர் பாம்புகள் மீது அதிக நாட்டம் கொண்டவர். இவர் தன்னுடைய யூடியூப் சேனலிலும் அடிக்கடி பாம்புகள் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் வழக்கம் போல் பாம்புகளுடன் விளையாட முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் 3 பாம்புகளுடன் விளையாடியுள்ளார். 






அந்த சமயத்தில் அவர் எதிர்பாராத விதத்தில் ஒரு பாம்பு திடீரென்று அவருடைய காலில் ஒரு பாம்பு கடித்துள்ளது. அந்தப் பாம்பு கடித்ததில் அவருக்கு விஷம் உடலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சுமார் 46 குப்பைகள் கொண்ட விஷத்தை எடுக்கும் மருந்து பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 


இது தொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பாம்புகளை எப்படி அணுகக்கூடாது என்பதற்கு இது ஒரு சான்று. பாம்புகள் எப்போதும் இது போன்ற நகர்த்தல்களை ஆபத்தாக பார்க்கும். ஆகவே அவற்றின் எதிர்வினை மிகவும் ஆபத்தான ஒன்றாக அமைந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.




மேலும் படிக்க:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஹோலி வகைகள்: எங்கே? எப்படி?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண