அரபிக்குத்து பாடல் மூலம் ஆல் ஏரியாவிலும் ஹிட் அடித்த விஜய், ஜாலி ஓ ஜிம்கானா பாடலை பாடி அடுத்த ஹிட்டுக்கு தயாராகி இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் அப்டேட் என நெல்சன் ட்வீட் போட்டதுதான் மிச்சம், ஒட்டுமொத்த இணையதளமும் பற்றிக்கொண்டது. காரணம் பாடலை பாடியிருப்பது விஜய். சிங்கிளே யூடியூப்பில் எகிடுதகிடு கிட்டடித்திருக்கும் நிலையில், பாடல் வேற லெவல் ஹிட்டாகும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் அவரது சினிமா கேரியரில் பாடிய பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். 


1994 - விஜயின் தந்தை இயக்கிய  ‘ரசிகன்’ படத்தில்  ‘பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி’ பாடலை பாடியதன் மூலம் முதன் முறையாக பாடகராக அறிமுகமானார் விஜய். 


1995-  ‘தேவா’படத்தில்  ‘அய்யயோ அலமேலு’,  ‘கோத்தகிரி குப்பம்மா’,  ‘ஒரு கடிதம் எழுதினேன்’ என மூன்று பாடல்களை விஜய் பாடியிருந்தார். 


1996 -  ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தில்,  ‘பாம்பே பார்டி ஷில்பா ரெட்டி’ பாடல்களை பாடினார். 


 ‘விஷ்ணு’ படத்தில் தாயார் ஷோபாவுடன் இணைந்து இவர் பாடிய  ‘தொட்டபெட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது. 


1996 -  ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் ‘பாம்பே பார்டி ஷில்பா ஷெட்டி’ பாடலை பாடினார்.  


 ‘மாண்புமிகு மாணவன்’  படத்தில் ‘திருப்பதி போனா மொட்ட மொட்ட’ பாடலை பாடினார்.


 ‘செல்வா’படத்தில்  ‘சிக்கன் கரி’ பாடலை பாடினார். 


1997 -  ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ படத்தில்  ‘அஞ்சாம் நம்பர் பஸ்சில் ஏறி’ பாடலை பாடினார்.


 ‘ஒன்ஸ்மோர்’ படத்தில்  ‘ஊர்மிளா ஊர்மிளா’ பாடலை பாடினார். 


 ‘காதலுக்கு மரியாதை’ படத்தில்  ‘ஓ பேபி’ பாடலை பாடினார். 


1998 - ‘துள்ளித்திருந்த காலம்’ படத்தில்  ‘டக் டக் டக்’ பாடலை பாடினார். 


 ‘பிரியமுடன்’ படத்தில்  ‘மெளரியா மெளரியா’, வேலை படத்தில் ’காலத்துக்கேத்த ஒரு கானா’ பாடல்களை பாடினார். 


 ‘நிலாவே வா’ படத்தில்  ‘நிலவே நிலவே, ’சந்திர மண்டலத்தை’ உள்ளிட்ட பாடல்களை பாடினார். 


1999- சூர்யா நடித்த பெரியண்ணா படத்தில்  ‘நாம் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து’, ஜூட்டடி லீலா, ரோட்டுல ஒரு உள்ளிட்ட பாடல்களை  பாடினார். 


2000-  ‘நெஞ்சினிலே ‘தங்க நிறத்துக்கு’ என்ற பாடலை பாடினார். 


 ‘பிரியமானவளே’ படத்தில் ‘மிஸ்ஸிசிப்பி நதி குலுங்க’ பாடலை பாடினார்.  


2001 -பத்ரி படத்தில்  ‘என்னோட லைலா வர்றாளே’ பாடலை பாடினார். 


2002 -  ‘தமிழன்’ படத்தில்  ‘உள்ளத்தைக் கிள்ளாதே’ பாடலை பாடினார்.


 ‘பகவதி’ படத்தில் கொக்கோ கோலா பிரவுன் கலருடா பாடலை பாடினார். 


2005-  ‘சச்சின்’ படத்தில்  ‘வாடி வாடி கை படாத சிடி’ பாடலை  பாடினார். 


2012 - 7 ஆண்டுகளுக்கு பிறகு  ‘துப்பாக்கி’படத்தில்  ‘கூகுள் கூகுள்’ பாடலை பாடியிருந்தார். 


2013-   ‘தலைவா’ படத்தில்  ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை பாடினார். 


2014 - ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி பாடலை பாடினார். 


 ‘கத்தி’ படத்தில்  ‘செல்ஃபி புள்ள’ பாடலை பாடினார். 


2017 ஆம் ஆண்டு  ‘பைரவா’ படத்தில்   ‘பாப்பா பாப்பா’ பாடலை பாடினார். 
 
2019 - பிகிலில் வெறித்தனம் பாடலை பாடினார். 


2021 -மாஸ்டரில்   ‘குட்டி ஸ்டோரி’பாடலை பாடினார்.  


2022 -  ‘பீஸ்ட்’ படத்தில்  ‘ஜாலி ஓ ஜிம்கானா’பாடலை பாடியிருக்கிறார்.