நாம் சப்பாத்தி, நான், ரொட்டி உள்ளிட்டவற்றை மிக எளிதாக செய்து விடுவோம். ஆனால் இதற்கு சைடிஷ் செய்ய தான் மணிக்கணக்கில் யோசிக்க வேண்டும். சைடிஷ் சுவையில் தான் ஒட்டுமொத்த உணவின் சுவையும் அடங்கி உள்ளது. அதனால் தான் சைடிஷ் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

 

சட்னி, ச்ப்ஜி, குருமா, முட்டை மசாலா, மஷ்ரூம் மசாலா என பல்வேறு வகையான சைடிஷ்கள் உள்ளன. இப்போது நாம் சப்பாத்தி, ரொட்டி, வீட் பரோட்டா உள்ளிட்டவற்றுடன் சைடிஷ்ஷாக வைத்து சாப்பிட ஒரு சுவையான ஹெல்தியான சைடிஷ் தான் தயார் செய்ய போறோம். வாங்க பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

 

தேவையான பொருட்கள் 

 

வெங்காயம், 3 தக்காளி, 2பச்சை மிளகாய், குடை மிளகாய், பட்டை, 2 கிராம்பு, 1பிரிஞ்சி இலை, 2ஸ்பூன் மிளகாய்த்தூள், 1ஸ்பூன் பன்னீர் பட்டர் மசாலா தூள், 1 பாக்கெட் பன்னீர், 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு வெண்ணெய், தேவையான அளவு  தண்ணீர்

 

செய்முறை

ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி, பின்பு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் குடமிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.


பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி  வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி பின்பு தாளிக்க பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.


பின்பு நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதை இதனுடன் சேர்க்க வேண்டும். ஏற்கனவே வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். பின்பு இதனுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.


இதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் பட்டர் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.பின்பு நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இப்போது சுவையான  கடாய் பன்னீர் ரெடி. 


மேலும் படிக்க


Parliament: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. மாநிலங்களவையில் இன்று விவாதம்..


Cauvery Water: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்குமா? கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..