Watch Video: திருமணக் கோலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்... இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
திருமண கோலத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்
பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப் படம் ரசிகர்களிடையே அவரை அடையாளம் காட்டியது. அப்படத்தை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாவது சினம், தர்மதுரை, கடலை, பறந்து செல்லவா, குற்றமே தண்டனை, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சாமி 2, செக்கச் சிவந்த வானம், வடசென்னை, விளம்பரம், மெய், நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும், க/பெ ரணசிங்கம், திட்டம் ரெண்டு, பூமிகா, ரன் பேபி ரன், தீரா காதல் என பல படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து விட்டார்.
சோலோவாக அசத்தும் ஐஸ்வர்யா
அதேசமயம் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். கனா படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. பின்னர் நடப்பாண்டில் மட்டும் ட்ரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, தி க்ரேட் இந்தியன் கிச்சன் என ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
திருமண கோலத்தில் ஐஷ்வர்யா
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக விளம்பரங்கள் மற்றும் போட்டோஷூட்களில் பங்கேற்று வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாரம்பரியாமான உடையில் பார்ப்பதற்கு திருமணக் கோலத்தில் இருப்பது போல் காட்சியளிக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா என்கிற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். திருமணம் செய்துகொள்ளா விட்டாலும் அவ்வப்போது திருமணக் கோலத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்வது பிரபலங்களுக்கு இடையில் வழக்கமானதாக மாறி வரும் நிலையில் ரசிகர்களுக்கு இந்த குழப்பம் வருவதில் தவறில்லை தான்.
துருவ நட்சத்திரம்
கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகின்ற நவம்பர் மாதம் 22ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக இருக்கிறது துருவ நட்சத்திரம் திரைப்படம்.
மேலும் படிக்க : Jaishankar: "மாற்றத்தை எதிர்க்கும் செல்வாக்கு மிக்க நாடுகள்" யாரை சொல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்?