ஆண்கள், பெண்கள் அனைவருமே ஜீன்ஸ் அணிகின்றனர். ஜீன்ஸ் அனைத்து பாலினத்தவரும் அணியும் பொதுவான ஆடையாக உள்ளது. ஜீன்ஸ் பேண்ட் வெகு சீக்கிரத்திலேயே மங்கி விடும். இதனால் பார்ப்பதற்கு பழைய ஆடை போன்று காட்சி அளிக்கும்.  சில நேரம் விலை உயர்ந்த ஜீன்ஸ் பேண்டுகள் விரைவில் மங்கி விட்டாலோ, அல்லாது பாக்கெட் போன்ற இடங்களில் ஏதேனும் கரை பட்டு விட்டாலோ அதை சரி செய்வது சற்று கடினமானது. 


நாம் ஜீன்ஸ் பேண்டை வெகு நாளைக்கு புதிது போன்று பராமரிக்க முடியும். அதற்கு ஒரு சில எளிய டிப்ஸ்களை கடைபிடித்தாலே போதுமானது. ஜீன்ஸ் பேண்ட்டை நீண்ட நாட்களுக்கு புதிது போன்று பராமரிப்பதற்கான சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாலாம். 


1. உங்கள் ஜீன்ஸ் வெளுத்துப் போகாமல் இருக்க வேண்டுமானால், ஜீன்ஸைத் துவைக்கும் போது உட்பகுதியை வெளிப்புறமாக திருப்பி விட்டு துவைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் சாயம் போகாது. எனவே ஜீன்ஸ் நீண்ட நாட்களுக்கு புதிது போன்று இருக்கும். 

2.சில நேரங்களில் ஜீன்ஸைத் துவைக்கும் போது, அதன் வடிவம் மாறி, தரம் குறைய வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க, ஜீன்ஸைத் துவைக்கும் போது அதன் பட்டன் மற்றும் ஜிப் ஆகியவற்றை மூடி விட்டு  துவைக்க வேண்டும்.

3.ஜீன்ஸைத் துவைக்கும் போது, ஜீன்ஸ் பாக்கட்டுகளில் ஏதேனும் பொருட்கள் உள்ளதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஜீன்ஸ் பாக்கெட்டி ஏதேனும் காகிதம் போன்ற பொருட்கள் இருந்து அதை அப்படியே துவைத்தால், அந்த காகிதம் கரைந்து, ஜீன்ஸின் தரத்தை பாதிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. 

4.ஜீன்ஸின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமெனில் ப்ளீச் செய்ய கூடாது. சிலர் சிறிய கரைகள் ஏதேனும் இருந்தாலும் அதை நீக்க ப்ளீச்சிங் செய்வார்கள். மேலும் ப்ளீச் செய்வதால் ஜீன்ஸின் நூலிழை பாதிக்கப்படுவதுடன்,  ஜீன்ஸ் குறைந்த நாட்களிலேயே  பழையது போன்று மாறிவிடும் என கூறப்படுகிறது. 

5.ஜீன்ஸ் பேண்டை துவைத்த பின் அதனை வெயிலில் உலர்த்தும் போது, சூரிய ஒளி  நேரடியாக ஜீன்ஸின் வெளிப்புறம் படாதவாறு, ஜீன்சின் உட்புறத்தை வெளிப்புறம்  திருப்பிப் போட்டு உலர்த்தலாம்.  நேரடியாக சூரிய ஒளி ஜீன்சின் வெளிப்புறத்தில் படும் போது நிறம் மங்கி விடுவதுடன், நூலிழை பாதிக்கப்பட்டு விரைவில் ஜீன்ஸ் பழையது போன்று மாற வாய்ப்புள்ளது என சொல்லப்படுகின்றது. 


மேலும் படிக்க


Cauvery Issue: காவிரி விவகாரம், கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்? தமிழக அரசின் அடுத்த மூவ் என்ன?


Chandrayaan-3 Rover: நாடே எதிர்பார்ப்பு..! -200 டிகிரி கடும் குளிர், இன்று மீண்டு வருமா சந்திரயான் 3-இன் பிரக்யான் ரோவர்?