ஓட்ஸ் எளிதாக செய்யகூடிய காலை உணவு. தினமும் உணவில் ஓட்ஸ் சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அதோடு உடல் எடையை குறைக்க உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


அன்றாட பரபரப்பான வாழ்க்கை முறையில் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது என்பது மிகவும் அவசியமானது. காலை உணவைத் தவிர்ப்பாதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எளிதாக உணவு தயாரிக்க விரும்புபவர்கள் ஓட்ஸை தேர்வு செய்யலாம். சிகப்பு அவல், வேகவைத்த தானிய வகைகள் உடன் ஓட்ஸ் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.  நார்ச்சத்து, புரதம் மற்றும் உடலுக்குத் தேவையான சத்துகள் இருப்பதால் ஓட்ஸ் நிபுணர்கள் பரிந்துரைக்கும் லிஸ்டில் உள்ளது. குறிப்பாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பதற்கும் ஒட்ஸ் சிறந்த தேர்வு. 


 ஓட்ஸில் அதிக அளவு பீட்டா-குளுக்கன் (beta-glucan) உள்ளது.  இதில் கரையக்கூடிய நார்ச்சத்து (soluble fibre) உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.  ஓட்ஸ் நீண்ட நேரத்திற்கு சாப்பிட்ட திருப்தி உணர்வைத் தருகிறது. இது உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு சிறந்த சப்போர்ட்டாக அமைகிறது. ஓட்ஸ் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் அளிக்கும் விளக்கத்தை காணலாம்.


இதய ஆரோக்கியம் மேம்பாடு:


ஓட்ஸில் உள்ள beta-glucan, நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பார்த்துகொள்ளும்.LDL கெட்ட கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. உடலில் கெட்ட கொழுப்பு அளவு அதிகரிப்பது இதய பாதிப்புகள் அதிகரிக்க காரணம் என்கிறது மருத்துவ உலகம். கெட்ட கொலஸ்டாரல் உடன்  beta-glucan சேர்ந்து உடலில் இருந்து அவற்றை வெளியேற்றும் பணியை திறம்பட செய்யும். ஓட்ஸ் ஆன்டி- ஆக்ஸிடண்ட் நிறைந்தது. தொடர்ச்சியாக ஓட்ஸ் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. இதில் உள்ள  மெக்னீசியம், பொட்டாசியம் சத்தும் கிடைக்கிறது.


உடல் எடை குறைக்க..:


உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு ஓட்ஸ் நல்ல நண்பன். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்கும்.  அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்கிறது. இது பசியைத் தூண்டும். ஓட்ஸில் கலோரிகள் குறைவு. ஊட்டச்சத்து அதிகம். அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. ஓட்ஸ் கிரெலின் போன்ற பசி ஹார்மோன்களை கன்ட்ரோல் செய்யும் என்று ஆராய்ச்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பசியைக் குறைக்க உதவுகிறது.இத்தனை பண்புகள் இருப்பதால் உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. 


இதய ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு ஓட்ஸ் சாப்பிடும் வழிமுறைகளாக சிலவற்றை காணலாம். 



  • ஓட்ஸ் செய்யும்போது பால், நட்ஸ், காய்ந்த திராட்ச்சை, பாதாம், வால்நட்ஸ், சூரியகாந்தி, வெள்ளரி, பூசணிக்காய் சீட்ஸ் ஆகியவற்றை சேர்க்காலம்.  இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நன்மை பயக்கும் கொழுப்புகளை உள்ளடக்கியது என்பதால் உணவு சத்தாக இருக்கும்.

  • ஓவர் நைட் ஓட்ஸ்- Rolled ஓட்ஸ் இரவே பால், சியா விதைகள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். காலை எழுந்ததும் நட்ஸ், சீட்ஸ், பழங்கள் சேர்த்து சாப்பிடலாம்.

  • வேகவைத்த ஓட்ஸ் - இலவங்கப்பட்டை, ஆப்பிள், சியா, ஆளிவிதை உள்ளிட்டவைகளோடு சேர்த்து பாலில் வேகவைத்து சாப்பிடலாம். யோகர்ட் சேர்த்தும் சாப்பிடலாம். செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு வேக வைத்த ஓட்ஸ் சாப்பிடலாம். இரவு நேரங்களில் வேகவைத்த ஓட்ஸ் சாப்பிடுவதே சிறந்தது. இல்லையெனில், இரவு 7 மணிக்குள் ஊறவைத்த ஓட்ஸ் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.

  • ஓட்ஸ் யோகர்ட், தயிர் ஆகியவற்றோடு சாப்பிடலாம். இது பசியை அதிகரிக்காது. ஓட்ஸ் இட்லி, தோசை, ஆம்லெட், பொங்கல், உப்புமா ஆகியவற்றையும் சாப்பிடலாம். 

  • ஓட்ஸ் உடன் கீரை, இறைச்சி, மீன் ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிடலாம். 


அன்றாட உணவுகளில் ஓட்மீலைச் சேர்ப்பதன் மூலம், மக்கள் சிறந்த ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு மேம்படும் என ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிக்கின்றனர். 


உடல் எடையை குறைக்க உதவுமா?


ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தெரிவிக்கையில், "ஓட்ஸ் அல்லது எந்த உணவும் எடை குறைப்பு பயணத்தில் முழுமையாக உதவாது. அதை எவ்வாறு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஓட்ஸ் உள்ளிட்ட டயட் முறை பின்பற்றுவதோடு, துரித உணவுகளை சாப்பிட்டால் அது உடல் எடையை குறைக்க உதவாது. உணவு தயாரிக்கும்போது குறைந்த அளவு எண்ணெய் பயன்பாடு, எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, சீராக உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவையும் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலின் நிலையை அறிந்துகொள்ள மருத்துவரை அணுகுவது நல்லது.”என விளக்கம் அளித்தார்.





இதையும் வாசிக்கலாமே..


Oats Beetroot Masala Dosa: தோசை பிரியரா? சுவையான ஓட்ஸ் - பீட்ரூட் மசாலா தோசை ரெசிபி இதோ!


Oats beetroot chilla: சுவையான ஓட்ஸ் -பீட்ரூட் சில்லா இப்படி செய்து பாருங்க - இதோ ரெசிபி!