ஓட்ஸ் சாப்பிட வேண்டும் என்பவர்கள் ஓட்ஸ் இட்லி, தோசை, ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் பொங்கல் என்று சாப்பிடுவர்களாக இருந்தால் ஓட்ஸ் - பீட்ரூட் சில்லா எப்படி செய்ய வேண்டும் என்று என்பதை காணலாம்.


ஓட்ஸ் பீட்ரூட் சில்லா


சில்லா மிகவும் பிரபலமான ஒரு உணவாகும்.  எனர்ஜெட்டிக்கான உணவும் கூட.  சில்லா பாரம்பரியமாக கடலை மாவு பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.


என்னென்ன தேவை?


கடலை மாவு - ஒரு பெரிய கப்


ஓட்ஸ் - ஒரு கப்


துருவிய கேரட்- ஒரு கப்


பீட்ரூட் - ஒரு கப்


சீரகம் - ஒரு டீஸ்பூன்


பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2


மஞ்சள் - ஒரு டீ ஸ்பூன்


தண்ணீர் - தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


உப்பு - தேவையான அளவு


இஞ்சி - ஒரு துண்டு


செய்முறை:


ஓட்ஸ், சீரகம், சிறிதளவு அரிசி மாவு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இப்போது பீட்ரூட், இஞ்சி, பச்சை மிள்காய் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து அதை ஓட்ஸ் கலவையுடன் சேர்க்கவும். இப்போது இதில் உப்பு, கடலை மாவு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.


 தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை சுடும் பதத்திற்கு மாவு இருக்க வேண்டும். மாவு தயாரானதும் 5 நிமிடங்கள் கழித்து தோசைகளாக ஊற்றி எடுக்கவும். 


தோசை கல்லில் மிதமான தீயில் மெலிதாக இல்லாமல் அடை மாதிரி வட்டமாக வார்க்கவும். மறுபுறம் புரட்டி, இருபுறமும் வேகும் வரை அதனை நன்கு சமைக்கவும். இதற்கு  எண்ணெய், நெய் என உங்கள் விருப்பப்படி பபயன்படுத்தலாம்.  பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் அவ்வளவுதான். ஊட்டச்சத்துமிக்க ஓட்ஸ் - பீட்ருட் சில்லா ரெடி!


ஓட்ஸ் நன்மைகள்:


தினமும் ஒருமுறை ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வது நலனுக்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர் அபர்ணா பரிந்துரைக்கிறார்.  ”ஓட்ஸ் எடை குறைக்க உதவுகிறது. தினமும் பழங்களுடன் சாப்பிட்டு வந்தால், அவை பலனளிக்கும். அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கும்.” என்று அவர் சொல்கிறார். மேலும், உடல் எடை குறைக்க வேண்டாம் என்பவர்களும் ஆரோக்கியத்திற்காக இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஓட்ஸ் சாப்பிடலானம் என பரிந்துரைக்கிறார்.


ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கன் ஃபைபர் எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.  இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்.டி.எல். கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.


பீட்ரூட் உங்கள் டயட்டில் இருக்க வேண்டிய மற்றொரு அருமையான காய்கறி. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் கலோரி குறைவாக இருப்பதால், எடை குறைக்கும் உதவும். அதோடு, ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இது ஹீமோகுளோபின் குறைபாடுகளை சமாளிக்க உதவும். பீட்ரூட்டை சாலட், சூப், தோசை, சட்னி உள்ளிட்ட வகைகளில் செய்து சாப்பிடலாம்.