கிவி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், அதில்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கிவி பழம் நம் இதயத்திற்கு நல்லது என்றும்  கருதப்படுகிறது. இது ஒரு தனித்துவமான சுவையுடைய பழம். கோடை காலத்தில் கிவி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் ஐந்து நன்மைகள் குறித்து பார்க்கலாம்.


குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது


கிவியில் ஆக்டினிடின் எனப்படும் நொதி உள்ளது, இது புரதத்தை கரைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. கிவி சாறு உடலில் உள்ள புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.


இதயத்திற்கு நல்லது


ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கிவி சாறு  இருதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது ஒரு நபரை பக்கவாதம் மற்றும் மாரடைப்புகளில் இருந்து காக்க உதவுவதாக கூறப்படுகிறது. 


சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்


கிவியில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் உள்ளன. அவை சருமத்திற்கு மிகவும் நல்லது.  அவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. மற்றும் தோல் சிதைவைத் தடுக்கின்றன.  புற ஊதா அல்லது தோல் சிராய்ப்பு காரணமாக தோல் சேதத்தை சரிசெய்ய கிவியில் உள்ள வைட்டமின் ஈ உதவி புரியும் என கூறப்படுகிறது. 


மன அழுத்தத்தை போக்க உதவுகிறது


உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை மீட்டெடுக்கவும்,  மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் கிவி சாறு உதவுவதாக கூறப்படுகிறது. செரோடோனின் என்ற கிவியில் உள்ள நொதி, மனநிலையை மேம்படுத்த உதவும் என கூறப்படுகிறது.


உடல் எடையை குறைக்க உதவுகிறது


உடலில் உள்ள கூடுதல் கொப்பை குறைக்க கிவி சாறு உதவுவதாக கூறப்படுகிறது.  கிவி சாறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் கலோரியை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. அதிகப்படியான கலோரியை தவிர்த்து ஒரு முழுமையான உணவை உண்ண எண்ணுபவர்கள் கிவியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க, 


Jailer : சூப்பர் ஸ்டாருடன் மலையாள சூப்பர் ஸ்டார்...! ஜெயிலர் படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்!


Vijay Makkal Iyakkam: யார் தப்பு செஞ்சாலும் அதிரடிதான்.. பரபர பனையூர் ஆலோசனை.. புஸ்ஸி ஆனந்த் பேட்டி