Jailer : சூப்பர் ஸ்டாருடன் மலையாள சூப்பர் ஸ்டார்...! ஜெயிலர் படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்!

ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டரை சன்பிக்சர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன் லால், ரஜினிகாந்த் உடன் இருக்கும் போஸ்ட்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.  எலோரும் இந்த காம்ப்போ பார்க்க வெயிட்டிங்? இன்னும் 5 நாட்கள் உள்ளது எனவும் சன்பிக்சர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.  

Continues below advertisement

ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினியின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பின. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலயா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடல் வெளியானது முதலே ஏராளமானோர் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. 

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.  ‘காவாலா’ பாடல் , ஹூக்கும் பாடலைத் தொடர்ந்து ஜூஜூபி பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில், ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன.

மேலும் படிக்க 

Jailer: இணையத்தை தெறிக்க விடும் காவாலயா பாடல்... 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை...

CM Stalin: ”தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல": அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola