பொங்காமல் இருக்க வேண்டுமா?


நாம் குக்கரில் , பருப்பு காய்கறிகள் சாதம் உள்ளிட்டவை வேக வைக்கும் போது அது பொங்கி வழியும். இதனால் குக்கரை கழுவது சற்று சிரமமாக இருக்கும். மேலும் கேஸ் ஸ்டவ்வையும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். இனி நீங்கள் குக்கரில் பருப்பு உள்ளிட்டவற்றை வேக வைக்கும் போது, குக்கரில் ஒரு ஸ்பூனை போட்டு வழக்கம் போல் மூடியை மூடி வேக வைத்தால் பொங்கி வழியாமல் இருக்கும். 


சிலர் வீட்டில் கிச்சனை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள் ஆனால் சிங்க் கரை படிந்து காட்சி அளிக்கும். இப்படி உங்கள் வீட்டு சிங்க் அழுக்காக இருந்தால் சிங்கில் ஒரு ஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை தூவி விட்டு பின் அதன் மீது எலுமிச்சை சாற்றை பிழிந்து விட வேண்டும். இவை 5 அல்லது 10 நிமிடங்கள் ஊறிய பின் தேவையில்லாத ஸ்கிரப் அல்லது ஸ்பான்ச் வைத்து லேசாக தேய்த்து கழுவினா சிங்க் பளிச்சென மாறி விடும். 


துரு போக வேண்டுமா?


வீட்டில் பயன்படுத்தாத பாத்திரங்களை பரண் மீது போட்டு வைப்போம். அது தேவைப்படும் போது அதை பயண்டுத்த எடுத்தால் அதன் மேல் ஆங்காங்கே துரு பிடித்திருக்கும். இது எவ்வளவு தான் தேய்த்து கழுவினாலும் போகவே போகாது. இந்த கறை எளிதில் நீங்க ஒரு ஃபாயில் ஷீட்டை எடுத்து அதை கசக்கி அதன் மீது இரண்டு பேர் பல் தேய்க்கும் அளவிற்கு கோல்கேட் டூத்பேஸ்ட்டை வைத்து எப்போதும் பாத்திரம் தேய்ப்பது போல் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் துரு பிடித்த கரைகள் போய்விடும். 


கிச்சனில் எப்போதும் அதிகமாக எறும்பு மொய்க்கின்றதா? மிக எளிமையான டிப்ஸை பயன்படுத்தி எறும்பு வருவதை தடுக்கலாம். தண்ணீர் வினிகர் டிஷ் லிக்விட் இது மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கலந்து கொண்டு, இதனுடன் சில துளி பெப்பர் மிண்ட் ஆயிலையும் சேர்க்க வேண்டும்.  கிச்சனின் சுவர் மேடை உள்ளிட்ட இடங்களில் இந்த லிக்விடை ஸ்பிரே செய்ய வேண்டும். பின் இதை துணி அல்லது டிஷ்யூ கொண்டு துடைத்து  விட வேண்டும். இப்படி செய்தால் எறும்பு வராமல் இருக்கும்.


மேலும் படிக்க 


Thenkuzhal Murukku : மொறு மொறு தேன் குழல் முறுக்கு : இப்படி செஞ்சு பாருங்க சுவை அள்ளும்..


நெருக்கடி தரும் ED.. சிக்ஸர் அடித்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு!


Badam Kesari: புரதச்சத்து நிறைந்த பாதாமில் நாவில் எச்சில் ஊறும் சுவையில் கேசரி செய்யலாம்.. செய்முறை இதோ!