வெட்டிய மீதி பாதி சுரைக்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க
நாம் சுரைக்காய், பூசணிகாய் ஆகிய காய்களை சில நேரங்களில் பாதியளவு பயன்படுத்தி விட்டு, மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து விடுவோம். இப்படி வைப்பதால் இரண்டு மூன்று நாட்களிலேயே வெட்டிய பகுதி அழுகியது போன்று மாறிவிடும். வெட்டிய காய் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்க, வெட்டிய காய் பகுதியில் எண்ணெய் தடவ வேண்டும், காயின் காம்பு பகுதியிலும் எண்ணெய் தடவி இதை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு சுற்றி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இப்படி வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் இந்த காய் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
குருமாவில் உப்பு காரம் அதிகமாகி விட்டால்
குருமா, சால்னா போன்றவற்றில் காரம் மற்றும் உப்பு அதிகமாகி விட்டால், 6 7 முந்திரி பருப்புகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து மிக குறைவான அளவு தண்ணீர் விட்டும் அரைத்து இதை குருமாவில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், காரம் மற்றும் உப்பு குறைந்து விடும். குருமாவின் சுவையும் அதிகமாகி விடும்.
குக்கர் பொங்கி வழியாமல் இருக்க
குக்கரில் நாம் சாதம், பருப்பு, குருமா போன்றவற்றை வேக வைக்கும் போது, விசில் வரும் போதெல்லாம் பொங்கி வழியும், இது குக்கரில் வழிந்து கறையாகி விடும், சில நேரம் கேஸ் ஸ்டவ்வின் மீதும் வழியும், இதனால், நாம் குக்கரை கஷ்டப்பட்டு கழுவுவதுடன், கேஸ் ஸ்டவ்வையும் துடைக்க வேண்டும். இப்படி குக்கர் வழியாமல் இருக்க, விசிலை சுற்றி ஒரு துணியை சுற்றி வைக்க வேண்டும். இப்படி வைத்தால் பொங்கும் தண்ணீர் கீழே வழியாமல் இருக்கும்.
பாகற்காய் சமையலில் கசப்பு குறைவாக
பாகற்காய் கசப்பு தன்மை கொண்டது. பல்வேறு நன்மைகளை கொண்டது. ஆனால் அதன் கசப்புத் தன்மை காரணமாக இதை பெரும்பாலானோர் சாப்பிடுவது இல்லை. பாகற்காயை நறுக்கி அதை அரை மணி நேரம் சுடு தண்ணீரில் போட்டு வைத்து பின் அதை எடுத்து சமைத்தால் கசப்பு குறைவாக இருக்கும்
மேலும் படிக்க
Sprouts Palak Chilla: புரதம் நிறைந்த முளைகட்டிய பாலக்கீரை அடை - செய்வது எப்படி?
Leftover Rice Chapathi : சாதம் மீதமாகிப் போச்சா? அதைவெச்சு மிருதுவான சப்பாத்தி செய்து அசத்துங்க!
வெள்ளை சட்டையில் உள்ள இங்க் கறை நீங்க.. ஃப்ரிட்ஜில் வாடை வராமலிருக்க டிப்ஸ்!