உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு குறைந்த அளவு சாப்பிடுவது உதவும் என்பது தேர்வாக இருக்கும். சில உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. ஆனால், குறைந்த கலோரிகள் உணவுகளை சாப்பிடுவது, உங்களுக்குப் பிடித்த உணவாக இருந்தாலும் அதை அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
வால்யூம் ஈட்டிங்:
அதிக கட்டுப்பாடுகளுடன் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது எடை குறைப்பு பயணத்தை கடினமாக்கிவிடும். உங்கள் இலக்கு எடையைக் குறைப்பதா? அல்லது ஆரோக்கியமான உணவு முறையா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் சுஹானி ஜெயின். " 'வால்யூம் ஈட்டிங்'. (Voulume Eating) - இது சிறந்த தேர்வாக இருக்கும்.
குறைந்த கலோரி கொண்ட உணவுகளை அதிகளவு சாப்பிட்டாலும் உங்களுக்கு கலோரி அதிகமாகாது. குறைந்த அளவு சாப்பிடுகிறோமே என்ற உணர்வும் இருக்காது. சாப்பிட்ட திருப்தி இருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் நிறைய சாப்பிட்டாலும் அந்த உணவு குறைந்த கலோரி கொண்டதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.” என்கிறார்.
குறைந்த கலோரி உணவுகள்:
உணவில் அதிக கலோரி உணவுகளை தவிர்த்து குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க எப்படி உதவும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் நுபூர் படீல் கூறுகையில்,” குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது பழங்கள், நட்ஸ், வேக வைத்த கொண்டைக்கடலை, சிறு தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதன் மூலம் பசியை கட்டுப்படுத்தலாம். அடிக்கடி பசி எடுக்காமல் இருக்க உதவும்.” என்கிறார்.
வால்யூம் ஈட்டிங் முறையை எப்படி பின்பற்றுவது என்று ஊட்டச்சத்து நிபுணர் சுஹானி சொல்லும் டிப்களை காணலாம்.
- ஒரு வேளை உணவில் நிறைய காய்கறிகள் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். கீரை, வெள்ளரிக்காய், ஜூகினி, ஆம்லெட், சால்ட உள்ளிட்டவற்றை சாப்பிடுங்க.
- ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் பாக்கெட்களில் அடைக்கப்பட்டவற்றை சாப்பிட வேண்டாம். மாறாக நிறைய பழங்கள், சிறு தானிய வகைகள், கேரட், யோகர்ட் ஆகியவற்றை சாப்பிடவும்.
- எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க. கெட்ட கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம்.
- சமைக்கும்போது அதிகளவு எண்ணெய் சேர்க்க வேண்டாம்.
- வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
நீர்ச்சத்து மிகுந்தது:
உடல் எடையை குறைக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது வழக்கமானதாகும். ஏனெனில், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பசியைக் குறைக்கவும் உதவும். இளநீர் குடிப்பது இயற்கையாகவே உடலில் நீர்ச்சத்து கிடைக்கும். அதோடு, பல்வேறு வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றனர்.
உடற்பயிற்சி பெஸ்ட்:
உடற்பயிற்சிக்குப் பிறகு இளநீர் அருந்துவது, வியர்வையின் மூலம் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை பெற உதவுகிறது. அவற்றை வேகமாக மீட்கவும் உதவுகிறது. இது எடை மேலாண்மைக்கு அவசியமானதாகவும் இருக்கிறது.
தூக்கம்:
நன்றாக தூங்குவது உடல் எடையை குறைக்க உதவும். சரியான தூக்கம் இல்லையென்றால் உடற்பயிற்சி செய்வதும் டயட் இருப்பதும் முழுமையான பலனை தராது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் நினைத்து அழுத்தம் கொள்ள வேண்டாம். மகிழ்ச்சியாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.