நாடாளுமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டப்பட்டு, அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 -ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வருகின்ற ஜுன் 4 -ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அப்போ சிறுத்தை! இப்போ முதலை" பீதியில் உறைந்த மயிலாடுதுறை மக்களுக்கு புது எச்சரிக்கை
தொகுதி விபரம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 - மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு பணி
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் 85 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை, கேரளா மாநில சிறப்பு காவல் பிரிவு, ஒரியா மாநில சிறப்பு காவலர்கள் உள்ளிட்ட 1480 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கறி சாப்பாடு விருந்து
இந்நிலையில் தேர்தல் பணியில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் உடன் இணைந்து செயல்பட்ட, ஒரியா மற்றும் கேரளா மாநில சிறப்பு காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் தடபுடலாக கறி சமைத்து விருந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் குஜராத் மாநில தேர்தல் பணிக்கு வழியனுப்பி வைத்தனர்.