எண்டோமெற்றியாசிஸ் பல பெண்களுக்கும் இருக்கும் பிரச்சனை. ஆயினும், இந்த குறைபாடு இருக்கும் பலரும் மருத்துவத்தின் உதவியிருந்து தள்ளியே இருக்கிறார்கள். மாதவிடாய் நாட்களில் நீடித்த வலி, அதிகமான ரத்தக்கசிவு, மன உளைச்சல், சீரண பிரச்சனைகள், வாந்தி, சிறுநீர் கழிக்கும்போது வலி போன்றவை இந்த குறைபாட்டின் வெளியில் தெரியும் முகங்கள். கருவறையின் வீக்கம் தான் வலிக்குக் காரணமாக இருந்தாலும், குழந்தை பேறு வரை பாதிப்பை இது ஏற்படுத்தும். ஆனால், இது கொடுக்கும் வலி ஒருவரது வாழ்வியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால், இந்த வலியை எப்படி கையாளலாம் என்பதைப் பார்க்கலாம்.


வாழ்வியலில் சிறிய மாறுதல்கள் செய்வது இந்த வலியை எதிர்கொள்ள பெரும் அளவில் உதவி புரியும்.


எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:


பழங்கள், பருப்புகள் மற்றும் கொட்டைகள், நார்ச்சத்து நிரம்பிய உணவுகள், சிறுதானிய உணவுகள், ஒமேகா 3 அதிகம் இருக்கும் உணவுகளான வால்நட் கொட்டைகள், சியா விதைகள், மீன் மற்றும் ஆலிவ் எண்ணெய், வைட்டமின் பி இருக்கும் உணவுகளான காய்கறிகள், வீக்கத்தைக் கட்டுபடுத்தும் பலன் கொண்ட உணவுகளான மஞ்சள், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் மற்றும் ரத்தபோக்கை எதிர்கொள்ள அதிக இரும்புச்சத்து உள்ள முட்டை, மீன், ஈரல் மற்றும் கீரை வகைகள்.



எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?


மோனோசோடியம் குளூட்டமேட் உள்ள டின்களில் அடைக்கப்பட்ட எல்லா உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். உடலில் காஃபின் சேர்க்கும் பானங்கள், கோலா வகை பானங்கள், மது, சிவப்பு கறி வகைகள், கொழுப்பு அதிகம் இருக்கும் உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள்


உடற்பயிற்சி


தினம் ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி வலியைக் கையாளுவதில் பெருமளவு உதவி புரியும்.


மேலும், போதுமான நேரம் தூங்குவது உடலில் ஹார்மோன் தீவிரங்களைக் குறைக்கும்.  


மேலும் லைஃப்ஸ்டைல் செய்திகளை படிக்கவும்..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்