Asthma: ஆஸ்துமாவில் இருந்து தப்பிக்க வேண்டுமா? என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?

உணவுப்பழகத்தின் மூலமாக, ஆஸ்துமாவைத் தடுக்க அல்லது அதன் அறிகுறிகளைக் குறைக்க விரும்பினால், இந்த எளிய உணவுப் பழக்க வழக்கங்களை பின்தொடரலாம்.

Continues below advertisement

நமது உணவுப் பழக்கம் ஆஸ்துமாவிற்கு காரணமாக அமைகிறதா? என்ற கேள்விக்கு கடினமாக இருந்தாலும், ஆம் என்பதுதான் பதில். ஓரளவிற்கு நம் உணவும், ஆஸ்துமா அறிகுறிகளுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் ஈ, பீட்டா கரோட்டின், ஃபிளாவனாய்டுகள், மெக்னீசியம், செலினியம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

Continues below advertisement

இந்த உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இது தவிர, இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், ஆஸ்துமா நோயாளிகளின் அறிகுறிகள் குறைகின்றன. உணவுப்பழக்கத்தின் மூலமாக, ஆஸ்துமாவைத் தடுக்க அல்லது அதன் அறிகுறிகளைக் குறைக்க விரும்பினால், இந்த எளிய உணவுப் பழக்க வழக்கங்களை பின்தொடரலாம்.

நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும்

பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலை அதிக ஆக்சிஜனுடன் வைத்திருக்க உதவும் முக்கிய காரணிகள். கிவி, ஸ்ட்ராபெரி, தக்காளி, ப்ரோக்கோலி, கேப்சிகம், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது. இவை நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன இதனால் சுவாசிக்கும் செயல்பாடு சீராகிறது.

வைட்டமின் டி சேர்த்துக் கொள்ளுங்கள்

உடலில் வைட்டமின் டி குறைவாக உள்ளவர்களுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. போதுமான வைட்டமின் டி பெற உணவில் பால், முட்டை மற்றும் மீன் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்: Watch Video: மீண்டும் மோதிக்கொண்ட கோலி- கம்பீர்.. அட விடுங்கப்பா.. சமாதானம் செய்த மிஸ்ரா, கேஎல் ராகுல்!

சல்பைட்டை குறைத்துக்கொள்ள வேண்டும்

பல உணவுப் பொருட்களில் சல்பைட்டுகள் பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சல்பைட்டுகள் பலருக்கு ஆஸ்துமா அறிகுறிகளைத் தூண்டுகின்றன. எனவே, ஒயின், உலர் பழங்கள், ஊறுகாய், இறால் போன்ற சல்பைட்டுகள் நிறைந்த உணவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை தவிர்க்கவும்

உணவு ஒவ்வாமைகள் (அலர்ஜி) பெரும்பாலும் ஆஸ்துமா அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இது இருமல் மற்றும் தும்மலுக்கு வழி வகுக்கிறது. உணவு ஒவ்வாமை காரணமாக, நீங்கள் மூச்சுத் திணறலை உணரலாம், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இதனால் மூச்சு விடும்போது சத்தம் வருதல், மற்றும் பல ஆஸ்துமா அறிகுறிகளை உருவாக்கலாம்.

பருப்பு வகைகள் சேர்க்கலாம்

பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எடை இழப்பு அல்லது ஆஸ்துமாவைத் தடுப்பது எதுவாக இருந்தாலும், இந்த வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் மந்திரம் போல் செயல்படுகின்றன. வைட்டமின் ஈ டோகோபெரோல் எனப்படும் இரசாயன கலவையைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது, இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறலைக் குறைக்க உதவுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement