உடல் ஆரோக்கியத்தையும், இயற்கையான சரும அழகையும் விரும்புபவர்களுக்கு ஏபிசி ஜூஸ் ஒரு வரப்பிரதாசம் ஆகும்.
ABC ஜூஸ் சமீப காலத்தில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலானோர் விரும்பி இந்த ஜூஸை விரும்பி குடிக்கின்றனர். இதை ஒரு மேஜிக்கல் ஜூஸ் என்று கூட சொல்லலாம்.
ABC ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு ஜூஸ். இவை மூன்றுமே உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்கிறது. இவை மூன்றிலும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும ஏராளமான மினரல்கள் நிறைந்திருக்கின்றன.
ABC ஜூஸில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். இது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் உடலில் கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்யும் இது சருமத்தை இளமையாகவும் தளர்வுகள் மற்றும் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்கச் உதவும். ஆரோக்யமான மற்றும் க்ளீயரான சருமத்தை இயற்கையாக பெற விரும்புபவர்களுக்கு இந்த ஏபிசி ஜூஸ் ஒரு வரப்பிரசாதம்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஜூஸ் நல்ல சாய்ஸ். இதில் உள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் எடை இழப்பும் வேகமாக நடக்கும். இதனால் உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஜூஸ் ஒரு நல்ல சாய்ஸ்.
இந்த அற்புதமான பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. மாற்றாக, நீங்கள் இரண்டு முக்கிய உணவுகளுக்கு இடையில் சாப்பிடலாம். உதாரணமாக, நீங்கள் காலை 11 மணியளவில் சாப்பிடலாம், இது காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரமாகும். அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் கூட இவற்றை பருகலாம்.
ஏபிசி ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 1 தோல் உரிக்கப்பட்டது
பீட்ரூட் – 1/2
கேரட் – 1
எப்படி தயார் செய்வது?
இந்த மூன்று பொருட்களையும் சிறு துண்டுகளாக்கி மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்.
விருப்பப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
சாற்றை வடிகட்டாமல் அப்படியே பருகுவது நல்லது. இதன் மூலம் முழு இந்த சாற்றில் உள்ள முழு சத்தும் நமக்கு அப்படியே கிடைக்கும் என்று நியூட்ரிஷினிஸ்ட்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க ,