Curry leaves Chicken Popcorn: வார நாட்களில் வேலை இருப்பதால் அசைவம் செய்ய நேரம் இருக்காது என கருதுபவர்கள், ஞாயிறு விடுமுறையில் அசைவம் எடுத்து சமைப்பார்கள். கறி எடுத்தால் எப்பொழுதும் போல் ஒரே சமையலை செய்து சாப்பிடாமல் கொஞ்சம் வித்தியாசமாக சமைக்கலாம். பொதுவாக சிக்கன் பகோடா அனைவருக்கும் பிடிக்கும். அந்த சிக்கன் பகோடாவை வித்யாசமாக செய்து சாப்பிட விரும்புவோர் ஒருமுறை கறிவேப்பிலை சிக்கன் பாப்கார்ன் செய்து பார்க்கலாம். 


கறிவேப்பிலை சிக்கன் பாப்கார்ன் செய்ய தேவையான பொருட்கள்


புதினா - அரை கப், கறிவேப்பிலை - ஒரு கப், பச்சை மிளகாய் -2 , இஞ்சி, பூண்டு, சிக்கன் - அரை கிலோ, கார்ன்ஃபோளார் - 6 டேபிள் ஸ்பூன், தயிர் - தேவையான அளவு, மிளகாய் தூள் - தேவையான அளவு, மிளகு - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய்.


செய்முறை:


முதலில் மிக்சி ஜாரில் மேலே குறிப்பிட்ட அளவுள்ள புதினா, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதன்பின்னர், அரை கிலோ சிக்கனை நன்றாக கழுவி எடுத்து கொண்டு அதில், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் தயிர், கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன், காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள், மிளகு, தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். சிக்கன் இந்த கலவையில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். 


சிக்கன் மசாலாவில் நன்றாக ஊறியதும், கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் சூடானதும், சிக்கனை எடுத்து அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். இந்த கறிவேப்பிலை சிக்கன் பகோடா அனைத்து வகையான சாப்பாட்டிற்கும் செம சைட்டிஷாக இருக்கும். 


மேலும் படிக்க: Stuffed Papad Rolls :சுவையான அப்பளம் ரோல்ஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்...


Tawa Paneer Bread Pizza :அட்டகாசமான சுவையில் ஸ்நாக்ஸ் ரெசிபி... கடாய் பனீர் ப்ரெட் பீட்சா செய்முறை பார்க்கலாம்...