Tawa Paneer Bread Pizza :அட்டகாசமான சுவையில் ஸ்நாக்ஸ் ரெசிபி... கடாய் பனீர் ப்ரெட் பீட்சா செய்முறை பார்க்கலாம்...

வழக்கமான ஸ்நாக்ஸ் ரெசிபிகளை சுவைத்து போரடித்து விட்டதா? புதுசு புதுசா ரெசிபிகளை ட்ரை பண்ண விரும்புரிங்களா?

Continues below advertisement

வழக்கமான ஸ்நாக்ஸ் ரெசிபிகளை சுவைத்து போரடித்து விட்டதா? புதுசு புதுசா ரெசிபிகளை ட்ரை பண்ண விரும்புரிங்களா? அப்போ உங்களுக்கான ரெசிபி தான் இது. கடாய் பனீர் ப்ரெட் பீட்சா ரெசிபி மிகவும் சுவையானது. இதை எளிமையாக செய்து விட முடியும். பனீர், ப்ரெட் காய்கறிகள் மசாலாக்கள், சீஸ் உள்ளிட்டவை  சேர்ந்த இதன் சுவை மிகவும் அலாதியாக இருக்கும். இந்த ரெசிபி நிச்சயம் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும். வாங்க சுவையான கடாய் பனீர் ப்ரெட் பீட்சா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Continues below advertisement

தேவையான பொருட்கள்

2 ரொட்டி துண்டுகள், 1 கப் பனீர் (சிறிய க்யூப்ஸாக வெட்டப்பட்டது), 1/2 பச்சை, சிவப்பு, மஞ்சள், குடைமிளகாய் நறுக்கியது, தக்காளி நறுக்கியது. 1/4 கப் ஸ்வீட் கார்ன், 2 டீஸ்பூன் பீஸ்ஸா சாஸ், 1/2 கப் மொஸரெல்லா( இத்தாலி)  சீஸ், திருநீற்று பச்சை- சுவைக்கேற்ப, 2 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்( பொடியாக நறுக்கிய காய்ந்த மிளகாய்), உப்பு சுவைக்கேற்ப, வெண்ணெய் அல்லது எண்ணெய். 

செய்முறை

1. முதலில் பனீரை க்யூப்ஸாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மசாலாப் பொருட்கள் (சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போன்றவை) மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஊற வைக்க வேண்டும். இதை அப்படியே ஒதுக்கி வைத்துவிட வேண்டும்.

2.மிதமான சூட்டில் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெயை ஒரு தவாவில் சேர்ந்த்து சூடாக்கவும். இதில் மிளகுத்தூள், தக்காளி மற்றும் ஸ்வீட் கார்ன் சேர்த்து சிறிது மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

3.தவா மீது ஒரு ரொட்டி துண்டு வைத்து, தாராளமாக ஒரு ஸ்பூன் பீஸ்ஸா சாஸை ரொட்டி துண்டின் மீது சமமாக பரப்பவும்.

4. வதக்கி வைத்துள்ள காய்கறி கலைவையில் இருந்து தேவையான அளவு எடுத்து  சாஸின் மேல் பரப்ப வேண்டும். ஊறவைக்கப்பட்டுள்ள பனீர் க்யூப்ஸை காய்கறிகளின் மேல் வைக்கவும்.

5.பனீர் மற்றும் காய்கறிகளின் மீது மொஸரெல்லா ( இத்தாலி) சீஸ் தடவ வேண்டும்.

6.சீஸ் மீது திருநீற்றுப் பச்சை, பொடியாக நறுக்கிய காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை தூவி விட வேண்டும்.

7. அவ்வளவுதான் சுவ்வையான கடாய் பனீர் ப்ரெட் பீட்சா தயாராகி விட்டது. 

மேலும் படிக்க

World Cup Points Table: இலங்கையின் தோல்வியால் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை.. மீண்டும் முதலிடத்தில் இந்தியா.. புள்ளி பட்டியல் இதோ!

விதியை கடைபிடியுங்க... சவுண்டு ஹார்ன்... ஃபிளாஷ் லைட்.. அபராதத்தை அள்ளிய போக்குவரத்து துறை!

Continues below advertisement
Sponsored Links by Taboola