Health Tips: மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? நன்மைகள் தருமா..? ஊட்டச்த்து நிபுணர் விளக்கம்..!

அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள். மாம்பழம் குறித்த மூடநம்பிக்கைகளை உடைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா சொல்வதை கேளுங்கள்.

Continues below advertisement

மாங்காய்கள் மெதுவாய் சிவந்து மாம்பழம் ஆவதை கவனித்துதான் வருகிறோம். ஏற்கனவே சில வெரைட்டி மாம்பழங்கள் சந்தைக்கு வந்துவிட்டன. இந்த கோடை சீசன் முழுக்க மாம்பழம் சாப்பிட்டு தீர்க்க ஆவலுடன் காதிருக்கிறீர்களா? உடல் எடை அதிகரிக்கும் என்று கூறி உங்களை கட்டுப்படுத்த, ஆசைகளை குழி தோண்டி புதைக்க அருகிலேயே ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள். மாம்பழம் குறித்த மூடநம்பிக்கைகளை உடைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா சொல்வதை கேளுங்கள்.

Continues below advertisement

மாம்பழம் எடை குறைப்புக்கு நல்லதா?

மாம்பழங்கள் உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும், சில சூழ்நிலைகளில் எடை குறைப்பதில் கூட பங்களிக்கிறது. முதல் விஷயம், அதிகமான பழங்களை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், ஆனால் அது ஆசையாக மட்டுமே இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். இரண்டாவது அதிகமான பழங்கள் உண்பதால் உடல் எடை கூடுவது இல்லை, நம் உழைப்பை மீறிய, நம் உடல் செயல்பாட்டை மீறிய அளவுக்கு சாப்பிடுகிறோம் என்பதுதான் பொருள். அதற்கு மாம்பழம் அல்ல, அதே அளவு வேறு எதை உண்டாலும் அப்படித்தான் ஏறும். நம் உடல் கலோரிகளை எரிக்கும் அளவுக்கு மாம்பழங்கள் சாப்பிடலாம் என்கிறார் சிம்ரூன். 

தொடர்புடைய செய்திகள்: ABP Nadu Metaverse: 3ஆம் ஆண்டில் நுழையும் ABP நாடுவின் புதிய முயற்சி...செய்தி நுகர்வில் புதிய அனுபவத்தைத் தரும் ABP NADU Metaverse..இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம்..!

மாம்பழங்கள் ஆரோக்கியமற்றதா?

இல்லை என்று பல ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். நார்ச்சத்தை பாதுகாக்க, பழங்களை சாப்பிடுங்கள், ஜூஸாக எடுக்க வேண்டாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறார். உங்கள் உடல் முழுமையாக ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும். அதற்கு மாம்பழம் காரணமில்லை. மாம்பழங்களில் குறைந்த கலோரி அடர்த்தி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இது பசி வேதனையை விலக்கி, நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கும். ஃபைபர் வகிக்கும் பாத்திரம் அது மட்டுமல்ல. மாம்பழங்களில் ஒப்பீட்டளவில் அதிக அளவு இயற்கை சர்க்கரை உள்ளது. இருப்பினும், மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவும். அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களும் ஆசைக்கு கொஞ்சம் சாப்பிடலாம். 

எடை குறைப்புக்கு மாம்பழம் சாப்பிட சிறந்த நேரம் எது?

நம்மில் பலர் உணவுக்குப் பிறகு மாம்பழத்தை ஒரு இன்பமான இனிப்பாக சாப்பிடுவோம். இது அதிக தீங்கு விளைவிக்கும். உணவின் முடிவில் மாம்பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும், இது எடை அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பாக உடல் எடையை குறைக்கும் டயட்டில் மாம்பழத்தை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அவ்வாறு செய்வதால் மற்ற நன்மைகளும் உண்டு. மாம்பழங்கள் உங்களுக்கு இயற்கையான ஆற்றலைத் தருவதோடு, உங்கள் உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். எனவே ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, உங்கள் பசியைப் பூர்த்தி செய்ய ஒரு கிண்ணம் மாம்பழத்தைத் சாப்பிடலாம். ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை எப்போதும் சரிபார்க்க நினைவில் கொள்ளுங்கள், அளவு முக்கியம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola