வெயில் காலம் வந்தாலே நமக்கு வெள்ளரிக்காய், தர்பூசணி, மாம்பழம் இதெல்லாம்தான் நியாபகம் வரும். அதிலும் மாம்பழம் ரொம்பவும் ஸ்பெஷல். வீட்டில் அதிகமாக மாம்பழம் இருக்கின்றதா? அப்போது 3 பொருட்களை மட்டும் வைத்து சுவையான ஜாம் செய்யுங்கள். இதை குறைந்த நேரத்தில் மிக எளிமையாக செய்து விடலாம். குழந்தைகள் இந்த ஜாமை விரும்பி சாப்பிடுவர். வாங்க மாம்பழ ஜாம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


மாம்பழம் -10


சர்க்கரை - தேவையான அளவு


மாம்பழ எசன்ஸ் - 4 சொட்டு


செய்முறை


நல்ல பழுத்த மாம்பழங்களை தேர்வு செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் தோலை நீக்கி விட்டு, கொட்டைகளை நீக்கி கொள்ள வேண்டும். இப்போது இந்த மாம்பழத்தை ஒரு கப்பில் அளந்துகொள்ளவும். இதே அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள் சற்றுக் குறைத்துக் கொள்ளலாம். 


மாம்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்ந்து நன்கு மையஅரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு நான் ஸ்டிக் பேனை(pan) அடுப்பில் வைத்து அதில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.


அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளவும். மாம்பழத்தின் பச்சை வாசம் போய் ஒரு வாசம் வரும். மேலும் மாம்பழம் லேசாக கொதிக்க ஆரம்பிக்கும். இப்போது  சர்க்கரையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.


சர்க்கரை உருகி மாம்பழத்துடன் சேர்ந்து அல்வா பதம் வரும். கரண்டியால் கிண்டி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதம் வந்ததும் 4 ஸ்பூன் மாம்பழ எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும். மிக கெட்டியாகி விடக்கூடாது. அப்படி ஆனால், ஆறியதும் ஜாம் பதத்தை விட கெட்டி ஆகி விடும். 


இதன் சூடு ஓரளவு போனதும் இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதை பிரெட் உடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் இந்த ஜாமை விரும்பி சாப்பிடுவர். 


மேலும் படிக்க 


Sprouts Palak Chilla: புரதம் நிறைந்த முளைகட்டிய பாலக்கீரை அடை - செய்வது எப்படி?


Ayurveda Tips: உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஓமம் தண்ணீர் - என்னென்ன?


வீட்டில் எறும்பு வராமலிருக்க! தண்ணீர் கேனில் துர்நாற்றம் வீசாமல் இருக்க! இதை மட்டும் பண்ணுங்க