அழுக்கான சிங்க்-ஐ கழுவ டிப்ஸ்


வீட்டில் உள்ள கரைபடிந்த சிங்கை எளிதில் எப்படி சுத்தம் செய்வது என்று பார்க்கலாம். தோசை அல்லது இட்லி மாவு அதிகம் புளித்து விட்டதா? அதை கீழே கொட்டி விட வேண்டும். அதை உபயோகமான முறையில் பயன்படுத்தலாம். அதிகமாக புளித்து நுரைத்துப் போன மாவில் இரண்டு கரண்டியை எடுத்து, அதை ஸ்கிரப்பரால் தொட்டு, அழுக்கும் கறையுமாக உள்ள சிங்கின் அனைத்து பகுதிகளிலும் பாத்திரம் தேய்ப்பது போல் தேய்க்கவும் பின்பு இதை நல்ல தண்ணீரில் கழுவினால் சிங்க் பளிச்சென மாறி விடும். 


அழுக்கான சீப்பை சுத்தம் செய்ய


அழுக்கான சீப்புகளை எளிமையான முறையில் சுத்தம் செய்து விடலாம். பல் தேய்க்கும் ப்ரஷ் பயன்பாடில்லாமல் இருந்தால் அவற்றை எடுத்துக் கொண்டு சீப்பின் அனைத்து இடுக்குகளிலும் படும்படி தேய்க்க வேண்டும். பின் சீப்பை தண்ணீரில் நனைத்துக் கொண்டு சிறிது ஷாம்புவை எடுத்து பிரஷால் சீப்பின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக இடுக்குகளில் படும்படி தேய்த்துக் கொடுக்க வேண்டும். இப்போது சுத்தமான தண்ணீரால் சீப்பை கழுவிக் கொள்ள வேண்டும். சீப்பு அழுக்கில்லாமல் புதிது போல் மாறிவிடும். 


கொசு வராமல் இருக்க டிப்ஸ்


தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் காபி தூளை சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இதை இரண்டு நிமிடம் கிளறி விட வேண்டும். இப்போது காபி தூள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். இதற்கிடையே இரண்டு கிராம்பை கல்லில் இடித்து எடுத்து காபி தூள் உடன் சேர்த்து கிளறி விட வேண்டும். இதை வீட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் அல்லது கொசுத்தொல்லை ஈத்தொல்லை அதிகமாக உள்ள இடங்களில் ஒரு அகல் வைத்து அதில் தயார் செய்து வைத்துள்ள இந்த காபி தூளை சேர்த்து அதன் மீது ஒரு கற்பூரத்தை வைத்து கற்பூரத்தை பற்ற வைக்க வேண்டும். இப்போது வீட்டில் ஒரு நல்ல மணம் பரவ தொடங்கும். இதிலிருந்து வரும் புகையின் வாசத்திற்கு கொசு வராமல் இருக்கும். மாலை 6 மணிக்கு இந்த விளக்கை ஏற்றி வைப்பது சரியாக இருக்கும். 


மேலும் படிக்க 


Ulundhu Kali:பெண்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் நன்மை பயக்கும் உளுந்து களி... செய்முறை இதோ!


ஊட்டச்சத்து நிறைந்த தோசை... டேஸ்டியான கேரட் சட்னி! இப்படி செய்து அசத்துங்க!