Singapore Fried Rice: சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ் சாப்ட்டுருக்கீங்களா? இப்படி செய்து பாருங்கள்! ரெசிபி இதோ

சுவையான சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Continues below advertisement

தேவையான பொருட்கள் 

பாஸ்மதி அரிசி – ஒரு கப்

Continues below advertisement

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

தனியா தூள் – ஒரு ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகு தூள் – ஒரு ஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கியது

இஞ்சி – ஒரு ஸ்பூன் நறுக்கியது

பச்சை மிளகாய் – 2 நறுக்கியது

கேரட் – 1 நறுக்கியது

பச்சை குடைமிளகாய் – நறுக்கியது அரை கப் 

மஞ்சள் குடைமிளகாய் – நறுக்கியது அரை கப் 

சிவப்பு குடைமிளகாய் –நறுக்கியது அரை கப் 

முட்டைக்கோஸ் – நறுக்கியது அரை கப் 

சோயா சாஸ் – 2 ஸ்பூன்

சில்லி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – ஒரு ஸ்பூன்

வெங்காயத்தாள் வெங்காயம் – 1

வெங்காயத்தாள் கீரை – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலை நறுக்கியது – ஒரு கைப்பிடி

செய்முறை

கறி மசாலா தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்து அப்படியே எடுத்து வைத்து விட வேண்டும். 

அடுப்பை மிதமான தீயில் வைத்து, அகன்ற கடாவை வைத்து நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து 30 நிமிடங்கள் வதக்க வேண்டும். 

பின்னர் நறுக்கிய கேரட், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் துருவிய முட்டைக்கோஸ் சேர்த்து, தீயை அதிகமாக வைத்து வறுக்க வேண்டும்.

இதனுடன் வெங்காயத்தாள் கீரையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்து கறி மசாலா தூள் சேர்த்து, நன்றாக கிளறி விட வேண்டும். 

அடுத்து சோயா சாஸ், சிவப்பு சில்லி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
 

பின்னர் பாஸ்மதி  சாதத்தை சேர்த்து மெதுவாக கலந்துவிட வேண்டும். மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்க வேண்டும்.

கடைசியில் நறுக்கிய வெங்காயத்தாள் கீரை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து விட்டால் போதும். அவ்வளவுதான் சுவையான சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ் தயார்.

மேலும் படிக்க

Sembarambakkam Lake: சென்னை மக்களே உஷார்..! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்டது 1,000 கன அடி உபரிநீர்!

Uttarkashi Tunnel Rescue: 17 நாட்கள் இருட்டில் நடந்தது என்ன? - விவரிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளி விஸ்வஜீத் குமார்

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola