கார பொரி, மசால் பொரி சாப்பிட்டு இருப்பிங்க. பொரி தோசை சாப்பிட்டு இருக்கிங்களா? பொரியை வைத்து தோசை செய்ய முடியும் என்று சொன்னால் ஆச்சர்யமாக உள்ளதா? பொரியைக் கொண்டு சுவையான பொரி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. 


தேவையான பொருட்கள் 


பச்சரிசி - 1 கப், பொரி - 4 கப், உளுந்து - 1/4 கப், உப்பு -தேவையான அளவு, வெந்தயம் - அரை ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு


 செய்முறை


ஒரு பாத்திரத்தில் பச்சரிசியுடன் தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் பொரியை தண்ணீரில் அதேநேரம் ஊறவைக்க வேண்டும். அதேபோல் உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் ஊறவைக்க வேண்டும்.


4 மணி நேரத்திற்கு பின், அரிசியில் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


பொரியில் இருக்கும் தண்ணீரை பிழிந்து எடுத்துவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். ஊற வைத்துள்ள உளுந்து மற்றும் வெந்தயத்தையும் அதே மிக்ஸி ஜாரில் சேர்த்து அனைத்தையும் நன்றாக தோசை மாவுப் பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


இந்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மாவு புளித்தவுடன்,  தோசை கல்லை சூடாக்கி, மாவை அதில் தோசையாக ஊற்றி எடுத்துதால் சுவையான பொரி தோசை தயார். 


இதற்கு கார சட்னி அல்லது கர்நாடகா சட்னி வைத்து சாப்பிட்டால் நல்ல காம்பினேஷனாக இருக்கும். 


மேலும் படிக்க


Crime: "எனக்கு டைம் ஒதுக்கவில்லை" - காதல் மனைவியை கொலை செய்த கணவர் பரபரப்பு வாக்குமூலம்


Worldcup Squad: உலகக்கோப்பையில் அக்‌ஷர் அவுட்? தமிழக வீரஷ் அஷ்வின் இன்? இன்று வெளியாகிறது இந்திய வீரர்கள் இறுதி பட்டியல்