மஞ்சூரியன் ரெசிபியை சப்பாதி, ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்டவற்றுடன் வைத்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை சுவையாக, குறைந்த நேரத்தில் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 400 கிராம்
சோள மாவு – 2 ஸ்பூன்
மைதா – 4 ஸ்பூன்
உப்பு – அரை ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 நறுக்கியது
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
தக்காளி கெட்சப் – அரை கப்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சோளமாவு கலவை – அரை கப்
வெங்காயத்தாள் வெங்காயம்- தேவையான அளவு
வெங்காயத்தாள் கீரை- தேவையான அளவு
செய்முறை
முதலில் பனீரை நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவற்றுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து நறுக்கிய பன்னீரை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மசாலாவில் கலந்த பன்னீரை சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய இஞ்சி-பூண்டு சேர்த்து வதக்கவேண்டும். வதங்கியதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் சோளமாவு கலவையை சேர்த்து கட்டிப்படாமல் கலந்து விடவேண்டும்.
இப்போது பொரித்த பன்னீரை சேர்த்து கலந்துவிட்டு, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து மீண்டும் கலந்து விடவேண்டும்.
சுவையான பன்னீர் மஞ்சூரியன் தயார். இதை ஃப்ரைட் ரைஸ், சப்பாத்தி, ரொட்டி, நாண் உள்ளிட்ட பல்வேறு உணவுகளுடன் சேர்த்து பரிமாறலாம்.
மேலும் படிக்க