தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - இரண்டு கட்டு, சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி, வர மிளகாய் – 8, இஞ்சி சிறிய துண்டு – 1, தக்காளி– 2, கடுகு – ஒரு ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய் – அரை மூடி, எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை
முதலில் கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காயை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 2 தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி, வெங்காயம், தக்காளி மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு இதனுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து, அனைத்தையும் கிளறி விட்டு, ஆற வைக்க வேண்டும்.
ஆற வைத்துள்ள மசாலா, துருவிய தேங்காய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சொத்தமல்லி சட்னி தயார். இதை சூடான இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க
Telangana Election Results: ஆட்சியை இழந்த சந்திரசேகர் ராவ்: தோல்விக்கான காரணங்கள் என்ன? - ஓர் அலசல்
Chembarambakkam Lake: ரெட் அலர்ட் எதிரொலி; செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் திறப்பு - நிலவரம் என்ன ?