சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (ஜன.3) சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது. இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் புத்தகக் காட்சி, ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில், காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.


புத்தகக் காட்சியில் ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளன. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2024ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ’’ஒரு பதிப்பாளராக புத்தகக் காட்சிக்கு வந்துள்ளேன். புத்தகங்களை வாங்காவிட்டாலும், அரங்கங்களுக்குச் சென்றாவது புத்தகங்களைப் படியுங்கள்’’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.