இனிப்பை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன? அதிலும் பாயாசம் என்றால் சொல்லவா வேண்டும், எல்லோருக்குமே பிடிக்கும், பாயாசத்தில், அடை பாயாசம், பால் பாயாசம், இளநீர் பாயாசம், பாசிபருப்பு பாயாசம் என பல வகைகள் உண்டு. இப்போது நாம் வெள்ளரிக்காய் பாயாசம் ரெசிபி குறித்து தான் பார்க்க போகின்றோம்.  இந்த பாயாசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். வாங்க வெள்ளரிக்காய் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


வெள்ளரிக்காய் – 2 கப் (கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கியது)





ஜவ்வரிசி – கால் கப்








இனிப்பு கண்டன்ஸ்ட் மில்க் – கால் கப்








பால் – 1 கப்








சர்க்கரை – கால் கப் ( சுவைக்கேற்ப)







நெய் – 3 டேபிள் ஸ்பூன்


ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்




முந்திரி – 3 டேபிள் ஸ்பூன்

 



திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை





முதலில் ஜவ்வரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ல வேண்டும்.








அடிக்கனமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஜவ்வரிசியை வேகவைக்க வேண்டும்.  தண்ணீர் அதிகமாகி விட கூடாது. 








அடுப்பை குறைவான தீயில் வைத்து ஜவ்வரிசியை வேகவைக்க வேண்டும். அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது அடிபிடித்துவிடும்.








ஜவ்வரிசி பாதியளவு வெந்துவரும்போதே வெள்ளரியை சேர்த்துவிடவேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து வேகவிடவேண்டும்.








இப்போது சர்க்கரை சேர்த்து அதை நன்றாக கரையவிட வேண்டும்.அடுத்தது பால் மற்றும் கண்டன்ஸ்ட் மில்க் இரண்டையும் சேர்க்க வேண்டும்.





குறைவான தீயில் வைத்து நன்றாக அனைத்தும் கலந்து வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் ஏலக்காய் சேர்த்து இறக்கிவிட வேண்டும்.

 

மற்றொரு கடாயில் நெய்யை சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை அதில் வறுத்து பாயாசத்தில் சேர்க்க வேண்டும். இதை நன்றாக மூடி வைத்துவிட்டு, நீங்கள் பரிமாறும்போது திறந்து பறிமாறலாம். அவ்வளவுதான் சுவையான வெள்ளரி பாயாசம் தயாராகி விட்டது.