நடிகை சமந்தா (Samantha) பிகினி உடையில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.


சமந்தாவின் பிகினி புகைப்படம்


மயோசிட்டிஸ் பாதிப்பினால் தற்போது சினிமாவில் இருந்து சிறு ப்ரேக் எடுத்துள்ள சமந்தா, தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனியார் ஃபேஷன் மேகசினுக்கான ஃபோட்டோஷூட்டில் கலந்துகொண்டு அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை வாவ் சொல்லவைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.


மேலும் தன்னுடைய திருமணம் பற்றி சமந்தா பகிர்ந்துள்ள பதிவும் கவனமீர்த்துள்ளது. “என் திருமணம் தோல்வியடைந்தபோது, ​​என் உடல்நிலையும் வேலையும் பாதிக்கப்பட்டபோது, ​​அது எனக்கு எப்போதும் இல்லாத வகையில் மும்மடங்கு பாதிப்பாக இருந்தது.


பிரிவு, வலி, கஷ்டம்..


நான் கடந்த இரண்டு வருடங்களாக சந்தித்தவற்றை விட குறைவான அளவே மக்கள் சந்தித்திருப்பார்கள் என நினைக்கிறேன். அந்த கடினமான நேரத்தில், உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து மீண்டும் வந்த நடிகர்கள் பற்றி நான் படித்தேன் . ட்ரோலிங் அல்லது பதட்டத்தை அனுபவித்த நடிகர்களைப் பற்றி நான் படித்தேன். அவர்களின் கதைகளைப் படித்தது எனக்கு உதவியது.


அவர்கள் கதைகளைப் படித்ததால் என்னாலும் முடியும் என்ற பலம் எனக்கு வந்தது. இந்த நாட்டில் அனைவரும் நேசிக்கும் நட்சத்திரமாக இருப்பது ஒரு நம்பமுடியாத பரிசு. எனவே அதற்கு பொறுப்பாக இருங்கள், நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். உங்கள் கதையைச் சொல்லுங்கள்.


இதுதான் முக்கியம்!


ஒருவருக்கு எத்தனை சூப்பர் ஹிட்கள் மற்றும் பிளாக்பஸ்டர் படங்கள் வருகின்றன, எத்தனை விருதுகள் வந்துள்ளன, பெர்ஃபெக்ட் உடல்வாகுடன் இருக்கிறார்களா, அழகான ஆடைகள் அணிகிறார்களா ஆகியவை எப்போதும் முக்கியமல்ல. அவர்கள் சந்தித்த வலி, கஷ்டங்களில் தான் இருக்கிறது. எனது தோல்விகளை, ஏற்ற இறக்கங்களை வெளிப்படையாக பகிர்வதில் எனக்கு பிரச்னையில்லை.


உண்மையில் நான் அவற்றால் ஆற்றல்மிக்கவராக மாறுகிறேன். என்னிடம் உள்ள எல்லாவற்றுடனும் நான் போராடப் போகிறேன் என்று எனக்குத் தெரியும், மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களும் தொடர்ந்து போராடுவதற்கான வலிமையைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்" என சமந்தா பதிவிட்டுள்ளார்.


 






சமந்தாவின் இந்தப் பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.


டாட்டூவை அழித்த சமந்தா?


முன்னதாக தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா பெயர் கொண்ட டாட்டூவை சமந்தா தன் உடலில் இருந்து நீக்கியதாகத் தகவல்கள் பரவின. சாய் என்ற தனது கணவரின் செல்லப் பெயரை தன் விலா எலும்பு பகுதியில் சமந்தா டாட்டூவாக பதிந்திருந்தார். இந்நிலையில் இந்த டாட்டூ இல்லாத அவரது புகைப்படம் இணையத்தில் பேசுபொருளானது.


ஒருபுறம் சமந்தாவும் நாக சைதன்யாவும் மீண்டும் இணைவதாக தகவல்கள் பரவிய நிலையில், இந்தப் புகைப்படம் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.